முதல்ல உன் குடும்பத்தை பாரு.. அப்புறம் நாட்டை பாரு.. விஜய் என்ன யோக்கியமா..? தோலுரித்த பிரபல நடிகர்..!

முதல்ல உன் குடும்பத்தை பாரு.. அப்புறம் நாட்டை பாரு.. விஜய் என்ன யோக்கியமா..? தோலுரித்த பிரபல நடிகர்..!

தடி எடுத்தவன் எல்லாம் தண்டைக்காரனா? என்று கேட்கக் கூடிய விதத்தில் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் விஷயம் பரபரப்பாக பல்வேறு விதமான விமர்சனங்களை பலர் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நடிகர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கு முதல்ல உன் குடும்பத்தை பாரு, அப்புறம் நாட்டைப் பாரு என்ற ரீதியில் பிரபல நடிகர் ஒருவர் விஜய்யை தோல் உரித்து விலாசி இருக்கிறார்.

முதலில் குடும்பத்தை பாரு..

சமீப காலமாக நடிகர் விஜய் குடும்பத்தோடு ஒட்டு உறவாக இல்லை என்பது போன்ற விஷயங்கள் கசிந்து வரக்கூடிய வேளையில் இவர் தன் தந்தையை சற்றும் மதிக்காமல் இருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் தனது தந்தையின் எண்பதாவது பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தினையோ எதையும் செய்யாத நிலையில் தன் மனைவியை விட்டும் பிரிந்து வாழ்வதாக ஊடகங்களில் அதிக அளவு செய்திகள் பரவி வந்தது.

இது குறித்து எந்த விதமான விளக்கத்தையோ, மறுப்பையோ இது வரை தெரிவிக்காத விஜய் குடும்ப நபர்களை திருப்திப்படுத்த முடியாதவர் எப்படி நாட்டில் உள்ள மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற கேள்வியை பிரபல திரைப்பட விமர்சகர் எழுப்பி இருக்கிறார்.

--Advertisement--

விஜய் என்ன யோக்கியமா?

மேலும் இன்று அரசியல் பணக்கட்டுக்களால் நிர்ணயிக்கப்படுகின்ற சூழ்நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அது போல பணத்திற்கு ஓட்டு என்ற கலாச்சாரம் பெருகிவிட்ட நிலையில் ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் நடிகர் விஜய் என்ன காரணத்தினால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.


அப்படி என்றால் சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் தற்போது பணம் வாங்கிக்கொண்டு வேறு கட்சிக்கு வாக்களிக்க போகிறார்கள் என்று தானே அர்த்தம்.

இதற்கு விஜய் கட்டாயம் விளக்கம் கொடுக்க வேண்டும். மேலும் நடிகர் விஜய் தன்னுடைய தாய் தந்தையை பிரிந்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் மனைவியுடன் வசிக்கிறாரா? இல்லையா? என்பதே புரியாத புதிராக உள்ளது.

ஏனெனில் இவரது மனைவி சங்கீதா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களின் டிக்கெட் 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் 3000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற ஊழல் எல்லாம் விஜயின் கண்ணுக்கு தெரியாதா?

மேலும் விஜய்யின் தந்தை இதய அறுவை சிகிச்சை செய்த போது மூன்று மாதங்கள் கழித்து தான் தந்தையை நலம் விசாரிக்க சென்றார். நடிகர் விஜய் மற்ற அரசியல்வாதிகளின் குறையை சொல்லித்தான் அரசியல் பயணத்தை துவங்க முடியும்.


அப்படி சொல்லும் போது விஜய் மட்டும் என்ன யோக்கியமா? என்ற கேள்வி கட்டாயம் எழுப்பப்படும் என்று பிரபல நடிகர் ரங்கநாதர் பேசியிருக்கிறார்.

இந்த பேச்சானது தற்போது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர் கட்சி தொண்டர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதோடு இணையங்களில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதற்கு உரிய பதிலை நடிகர் விஜய் வழங்க கூடிய பட்சத்தில் இவர் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதை விடுத்து எல்லாவற்றுக்கும் மௌனம் சாதிப்பதால் எந்த வித பயனும் இல்லை என்று கூறலாம்.