” அழகுக் கலையில் நுங்கு..!” – இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!

சரும  ஆரோக்கியத்தை பேணக்கூடிய அனைவரும் வெயில் காலத்தில் கிடைக்கும் நுங்கினை பயன்படுத்தி எண்ணற்ற சரும ஆரோக்கியத்தை பெற முடியும்.

வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் வியர்க்குருவை நீக்குவதில் இந்த நுங்கு அளப்பரிய பணியை செய்கிறது. இன்னும் கிராமங்களில் நுங்கு பட்டையை பயன்படுத்தி வியர் குரு வந்தவர்களின் உடல் முழுவதும் தேய்த்து விட்டு கால்மணி நேரம் கழித்து குளிப்பார்கள்.

இதன் மூலம் உடலில் எரிச்சலை தூண்டுவதோடு பாடாய் படுத்தும் வியர்குருவின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் முக அழகில் அக்கறை செலுத்தும் பெண்கள் நுங்கு பட்டையை முகத்தில் தேய்ப்பதின் மூலம் முகத்தில் இருக்கும் மருக்கள் ,அழுக்குகள் நீங்கிவிடும்.

 ஜெல்லி போன்ற இருக்கும் இந்த நுங்கினை மிக்ஸியில் சிறிதளவு அரைத்து எடுத்து அதனோடு மஞ்சள் பொடி எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்துவதன் மூலம் முக அழகு அதிகரிக்கும்.

--Advertisement--

 கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் நீக்கக்கூடிய சக்தி இந்த பேஸ் பேக்குக்கு உள்ளது. இந்த ஃபேஸ் பேக்கை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பயன்படுத்துவதன் மூலம் வெயில் காலங்களில் ஏற்படுகின்ற சரும பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

 அதுமட்டுமில்லாமல் நுங்கின் சதை பகுதி கற்றாழையின் சதை பகுதி தேங்காய் தண்ணீர் இது மூன்றும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து உடல் முழுவதும் அப்ளை செய்து கொள்வதின் மூலம் சருமம் ஹெல்தியாக மாறும்.

சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்குவதோடு சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை பளபளக்க வைக்கும்.

எவ்வளவுதான் நைசேல் பவுடர் போன்றவற்றை உபயோகித்து வேர்க்குருவை நீங்கள் தடுக்க முயன்றாலும் இயற்கை பரிசாக கொடுத்த இந்த நுங்கினை பயன்படுத்தி நீங்கள் உங்கள் சருமங்களில் ஏற்பட்டிருக்கும் வியர் குருவின் பாதிப்பை மிக எளிதில் நீக்கலாம்.

 

குழந்தைகளுக்கும் இது பக்காவாக யூஸ் ஆவதால் நீங்கள் இதை பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வையுங்கள். பக்க விளைவில்லாத இந்த நுங்கு எண்ணற்ற நன்மைகளை நமக்கு அள்ளித் தருகிறது.