” விந்தணுக்களை அதிகரிக்க முருங்கைக்காய்..!” – இன்னும் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

முந்தானை முடிச்சு படத்தில் நடிகர் பாக்கியராஜ் கூறியபடி  முருங்கைக்காயில் ஒளிந்திருக்கும் நன்மைகள் ஏராளம். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படுகின்ற மலட்டுத்தன்மையை சரி செய்வதோடு அவர்கள் விந்தணுக்களில் உற்பத்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் இந்த முருங்கை காய்க்கு உள்ளது.

விந்தணு குறைபாட்டால் கவலைப்படும் ஆண்கள் கட்டாயம் தினமும் உணவில் முருங்கைக்காயை சேர்த்துக் கொள்வதின் மூலம் ஒரு முறுக்கேறிய நரம்புகளை எளிதில் பெற முடியும்.

இந்த முருங்கைக்காலில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கண்புரை மற்றும் வறண்ட கண்களுக்கு மிகவும் அற்புதமான மருந்தாக திகழ்கிறது. அது மட்டுமில்லாமல் கண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இது கொடுப்பதால் கண்களை பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

 சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை வெளியேற்றக் கூடிய தன்மை கொண்ட இந்த முருங்கைக்காய் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றக்கூடிய தன்மை இருப்பதால் மறவாமல் முருங்கைக்காயை உங்கள் உணவு பட்டியலோடு இணைத்து விடுங்கள்.

 கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்த இந்த முருங்கைக்காயில் இருக்கும் ஃபோலோட் சத்து  ஸ்பைனா பிஃபிடா  என்ற நரம்பு குழாய் குறைபாட்டை தவிர்க்க உதவி செய்கிறது.

--Advertisement--

 பெண்களை குறி வைத்து தாக்கக்கூடிய ஆஸ்திரோபோரோசிஸ் என்ற எலும்பு அடர்வை குறைக்கின்ற நோயை நீக்கி எலும்பு அடர்வை அதிகரிக்க கூடிய தன்மை எந்த முருங்கை காய்க்கு உள்ளது. எனவே ஆற்றல் கொண்ட இந்த முருங்கை காயை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தக்கூடிய ஆற்றல் முழங்கையில் இருப்பதால் இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்  உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதின் காரணமாக காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தை அண்ட விடாது.

இயற்கையாகவே கலோரிகள் குறைந்த முருங்கைக்காயில் அத்யாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்துவதின் மூலம் கணிசமான அளவு ரத்தத்தில் சர்க்கரையை குறைக்க முடியும்.

 உயர் ரத்த அழுத்தத்திற்கும் முருங்கைக்காய் மிகச்சிறப்பான பணியில் செய்வதால் இது தமனிகள் ஏற்படக்கூடிய தடிப்பை குறைக்க உதவி செய்கிறது. எனவே கட்டாயம் வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கை உங்கள் உணவு பட்டியலில் இருக்கட்டும்.