கடலில் கலந்த கச்சா எண்ணெய் – மீனவர்களுக்கு மூச்சு திணறல்

 நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் நிறுவனத்தின் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கச்சா எண்ணெய் கடலில் கலந்து  அந்த பகுதி மீனவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

நாகை மாவட்டம் பட்டினம் செய்தியை அடுத்த நாகூர் பகுதியில் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கலந்தது வருவதால்  மீனவ கிராமங்கள்  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம் பகுதியில் நிறுவனத்தால் பெட்ரோல் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பல மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை பெட்ரோலிய கழகத்தின் வழியாக சமந்தா பேட்டை  அருகில் கப்பலில் வரும் பெட்ரோலிய கச்சா எண்ணெயை  குழாய் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லும் வழியில்  உடைப்பு ஏற்பட்டு  பட்டினச்சேரி கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளது.

கச்சா எண்ணெய் கழிவில் இருந்து வெளியேறும் நெடியின் மூலம் கண்ணெரிச்சல் மூச்சுத் திணறல் போற்ற பல பாதிப்புகளுக்கு அந்த பகுதி மீனவ கிராமங்கள் ஆடப்பட்டுள்ளது.

--Advertisement--

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பெட்ரோலிய்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விரைவில் இது சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் கொடுத்த நிலையில், அந்த பகுதி மீனவர்கள் வேலைக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து வருகின்றனர்.

இந்த கச்சா எண்ணெய் கழிவுகளை நீக்கினால் மட்டும் போதாது அந்த குழாயை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என அந்த பகுதி மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற  முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்