திமுக ஆட்சியில் உச்சத்தைத் தொட்ட ரியல் எஸ்டேட் – அமைச்சர் சொன்ன விளக்கம்

திமுக ஆட்சியில் எப்போதும் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கும் என்பது தமிழ்நாடு முழுவதும் மக்கள் அறிந்த ஒன்றே.

இருப்பினும் நடப்பு நிதியாண்டில் ரியல் எஸ்டேட் துறை இதுவரை வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு கடுமையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டார். மேலும் பத்திரப்பதிவின் தொகையை இரு மடங்காக உயர்த்தினார். இது தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் அழிந்து வருவதை சிறிது தடுத்தது என அரசியல் விமர்சனங்கள் பெரிதும் பாராட்டினர்.

இந்த நிலையில் அதிமுக ஆட்சி வீழ்ந்து திமுக ஆட்சி வந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் ரியல் எஸ்டேட் தொழில் எழுச்சி கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் காலியாக கிடந்த நிலங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு  ரியல் எஸ்டேட் கொடிகட்டி பறப்பதை ஒரு சாதாரண மனிதனால் கூட  பார்க்க முடிகிறது.

--Advertisement--

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் மதுரையைச் சேர்ந்த பி. மூர்த்தி அவர்கள் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்களின் மகனுக்கு மதுரையில் பிரம்மாண்டமான திருமணம் நடைபெற்றது. இதில் 100 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டு இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தங்கள் விமர்சனத்தை முன் வைத்தனர்.

மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்காக கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகளை தனது மகன் கல்யாணத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் பி மூர்த்தி அவர்களின் மீது வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டதாவது வணிகவரித்துறை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 24,527.39 கோடி வருவாயை அதிகமாக ஈட்டியுள்ளது; பத்திர பதிவுத்துறை ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது என்று பெருமையாக அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக ஆட்சி என்றாலே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் ரியல் எஸ்டேட் அதிகமாக இருக்கும் என்ற மக்களின் பேச்சு வழக்கு அமைச்சர் மூர்த்தி அவர்களின் இந்த அறிக்கையால் உறுதிப்பட்டு உள்ளது என அரசியல் விமர்சனங்கள் பேசி வருகின்றனர்.