Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“இந்த கிச்சன் டிப்ஸ்ச ஃபாலோ பண்ணுங்க..!” – ஐடியா வேற லெவல்ல இருக்கும்..!

பொதுவாகவே சமையல் அறையில் வேலை செய்யக்கூடிய பெண்கள் எண்ணற்ற இடர்களை சந்திக்கிறார்கள். இப்படிப்பட்ட இடர்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பொருட்களை கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தவும் இந்த கிச்சன் டிப்ஸ் நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.

டிப்ஸ் 1

 இது பாத்திரம் தேய்க்கும் போது உங்கள் கைகளுக்கு அலர்ஜி ஏற்படும் என்று தெரிந்தால் அல்லது நீண்ட நேரம் நீரில் கைகளை வைத்திருப்பதால் கைகளில் சொரிச்சல், அமைச்சல் போன்றவை ஏற்படும். அப்படி இருக்கக்கூடிய பெண்கள் பாத்திரம் கழுவும் போது கையில் கையுறை அல்லது பிளாஸ்டிக் கவரை நன்றாக கைகளில் போட்டு ரப்பர் பேண்டை போட்டுவிட்டு பின்பு பாத்திரத்தை தீர்ப்பதன் மூலம் அந்த பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

டிப்ஸ் 2

 இட்லிக்கு மாவு அரைக்கும் போது மிக விரைவில் புளித்து விடும் என்று கூறும் பெண்கள் வீட்டில் மாவு புளிக்காமல் இருக்க இந்த வழியை பயன்படுத்துங்கள். நீங்கள் மாவு அரைத்த உடனேயே வெற்றிலையை  காம்பு பகுதி மாவில் மூழ்கி இருக்குமாறு போட்டு வைத்து பாருங்கள் இவ்வாறு செய்வது மூலம் மாவு இருக்கும்.

டிப்ஸ் 3

சந்தையில் இருந்து பிள்ளைகளுக்கு திராட்சையை உண்ண வாங்கி வரும் போது அந்த திராட்சையில் அதிக அளவு மெழுகு தடவப்பட்டிருக்கும். இதை நீக்க நீங்கள் வெறும் நீரில் சுத்தம் செய்தால் போதாது. நீங்கள் திராட்சை தனித்தனியாக பிரித்தெடுத்து ஒரு பௌலில் வெதுவெதுப்பான சூடான நீரில் போட்டு அதில் கல் உப்பு மற்றும் மஞ்சள் பொடியை போட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிய பின் மீண்டும் நல்ல நீரில் கழுவி உண்ண கொடுங்கள்.

டிப்ஸ் 4

எலுமிச்சம் பழத்தில் உள்ள சாறு முழுமையாக வரவேண்டும் என்றால் எலுமிச்சம்பழத்தை ஃபோர்க் ஸ்பூனில் குத்தி  லேசாக அடுப்பில் வாட்டி அதன் பிறகு எடுத்து நீங்கள் அழுத்தி பிழிந்தால் எலுமிச்சம் சாறு மிச்சமில்லாமல் பழத்தில் இருந்து முற்றிலும் வெளியே வந்து விடும்.

--Advertisement--

மேற்குரிய இந்த வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்து பார்த்தால் கட்டாயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top