ஈரோடு தேர்தலில் பணத்திற்கு செல்வாக்கு உண்டு – உண்மையை உளறிய காங்கிரஸ் தலைவர்

நடந்து முடிந்த ஈரோடு தேர்தலில் ஓட்டுக்கு  பணம் கொடுத்தார்கள் என்ற செய்தி சமூக வலைதளம் முழுக்க பரவி இருந்தது இதைப்பற்றி தேர்தல் ஆணையம் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

சமூக வலைதளங்கள் முழுக்க ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றியும் தினமும் 500 ரூபாய்க்கு மக்களை ஏற்றிச் சென்று கூட்டங்களை நடத்தியது தொடர்பாகவும் பரிசு பொருட்களான ஸ்மார்ட் வாட்ச் கொலுசு போன்ற பல பரிசுப் பொருட்கள் கொடுத்ததற்கான ஏற்பட ஆதாரங்களுடன் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இருப்பினும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்தது, நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியானது இதன் அடிப்படையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்க்கட்சிகள் பணத்துக்கு கிடைத்த வெற்றி என விமர்சித்திருந்த நிலையில் திமுகவினரும் காங்கிரஸின்  உறுப்பினர்களும் இது  ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறி வருகின்றனர்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ்  அழகிரி அவர்கள்  தேசிய அரசியலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முடிவு செய்கிற அளவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உயர்ந்து உள்ளார், மேலும் தேர்தலில் பணத்திற்கும் ஓரளவு செல்வாக்கு உண்டு இல்லை என்று சொல்லவில்லை பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றிருக்க முடியும் எனில் அதிகமாக பணத்தை வைத்திருக்கக்கூடிய அம்பானியும் அதானையும் தான் இந்தியாவின் பிரதமராக இருக்க முடியும் என்று கூறினார்.

--Advertisement--

அவர் பேசிய இந்த விஷயத்தை வெற்றி பெற்ற கட்சியை சேர்ந்தவரே பணத்திற்கு செல்வாக்கு உண்டு என ஒப்புக்கொண்டார் என எதிர்க்கட்சியினர் அவர் பேசிய காணொளியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற சுவாரசியமான பல அரசியல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.