“சருமத்தின் நிறத்தை அதிகரிக்க..!” – இந்த பியூட்டி டிப்ஸ் போதும்..!

எல்லோரும் கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும். முகத்தைப் பார்த்தாலே பளிச்சென்று இருப்பதாக சொல்லி பலரும் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேலும் அவர்கள் நினைப்பதோடு நின்று விடாமல், முக அழகு மற்றும் மேனி அழகை அதிகரிக்க பலவிதமான அலங்கார பொருட்கள் வாங்கி குவித்து பயன்படுத்துகிறார்கள்.

கூடவே பணம் அதிகம் இருப்பவர்கள் பியூட்டி பார்களை நோக்கி அதிக அளவு படை எடுத்துச் செல்கிறார்கள். இதன் மூலம் இவர்களின் மேனி நிறத்தை வெள்ளையாக மாற்றி விடுகிறார்கள்.

அப்படி பியூட்டி பார்லருக்கு செல்ல முடியவில்லை. உங்கள் நிறத்தை உங்களால் அதிகரித்துக் கொள்ள முடியவில்லை என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே உங்கள் சருமத்தை வெள்ளையாக முடியும். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சருமத்தை வெள்ளையாக்க உதவும் குறிப்புகள்

உங்கள் சருமத்தை இயல்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாற்ற வேண்டுமென்றால், அதற்கு ஆப்பிள் விழுது 2 டீஸ்பூன், பால் பவுடர் அரை டீஸ்பூன் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்த பின்பு உங்கள் முகத்தை கழுவி வாருங்கள். தொடர்ந்து இந்த இரண்டு பொருட்களையும் நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் நீங்களும் தமன்னாவை போல் மில்கி பியூட்டியாக மாறிவிடுவீர்கள்.

கல் உப்பை, இளம் சூடான நீரில் சிறிதளவு போட்டு உங்கள் முகத்தை மட்டும் கண்களை கழுவுங்கள். இதன் மூலம் பிரகாசமான முக அமைப்பு உங்களுக்கு விரைவில் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் ஆரஞ்சு பழ சாறை கொண்டு உங்கள் முகத்தை துடைத்து வர கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மாறி முகமே பிரகாசமாக மாறிவிடும்.

--Advertisement--

குப்பைமேனி இலை சாறுடன், மஞ்சள் சிறிதளவு சேர்த்து தினமும் குளிப்பதற்கு முன்பு உங்கள் சருமம் முழுவதும் தேய்த்து விட்டு குளிப்பது மூலம் சருமத்தில் இருக்கக்கூடிய கருப்பு நிற படைகள் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் எல்லாமே நீங்கி விரைவில் சருமம் பளபளப்பாக மாறும்.

கண்களுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதிகளவு பழங்களை உட்கொள்ளும் போது உங்கள் உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் விரைவில் வெளியேறி உங்கள் சருமம் ஆரோக்கியமாக மாறும். இதன் மூலம் இயல்பான நிறத்தை விட அதிக அளவு சிவப்பு நிறத்தை உங்கள் சருமம் விரைவில் எட்டிவிடும்.

சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு தரக்கூடிய ஆப்பிள் ,பீட்ரூட் ,கேரட் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் சருமமும் பலரும் மிக்கும்படி வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும்.