கடக ராசி காரர்கள் இதுல ஜாக்கிரதையா இருங்க.. ஹேமா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ..!

கடக ராசி காரர்கள் இதுல ஜாக்கிரதையா இருங்க.. ஹேமா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹேமா ராஜேஷ்.

துவக்கத்தில் ஹார்டுவேர்டு இன்ஜினியராக பணிபுரிந்து வந்த ஹேமா ராஜேஷ், மாடலிங் செய்திருக்கிறார். விளம்பர படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார்.

அதன்மூலம் கிடைத்த பிரபலத்தின் அடிப்படையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஹேமா ராஜேஷ்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துள்ள ஹேமா ராஜேஷ், ரசிகர்களின் மனதில் நிறைய இடம்பிடித்துள்ளார். அவரது குழந்தைத்தனமான பிடிவாதமும், கோபமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

கார் விபத்து..

சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹேமா ராஜேஷ், எனக்கு வெளியில் செல்வது என்றால், காரை சுத்தமாக கழுவி விடுவேன். தேய்த்து தேய்த்து கழுவி சுத்தமாக துடைத்து காரில் செல்ல விரும்புவேன்.

ஆனால் காரை எப்போது இப்படி கழுவி எடுத்து சென்றாலும் அன்று விபத்து ஏற்பட்டு விடும்.

புத்தாண்டு அன்று, இப்படித்தான் காரை கழுவி சுத்தமாக்கி ஆசையாக எடுத்துச் சென்றேன். ஒரு போதை ஆசாமி வந்து காரில் மோதி விட்டார்.

என் காருக்கு பின்னாடி இருந்த இன்னோவா, போதையில் வந்த லாரி டிரைவர் இன்னோவா காரை இடித்து, அந்த கார் என் காரை மோதி விட்டது.

என்னுடைய காரும் பயங்கரமாக சேதமடைந்து விட்டது.

எப்போது காரை சுத்தப்படுத்தி, கழுவி துடைத்து எடுத்துச் சென்றாலும் இதுபோன்ற சின்ன சின்ன விபத்துகள் நடந்து விடுகிறது.

கடக ராசிக்காரர்களுக்கு தான் இதுபோல் வண்டி வாகனங்களில் பிரச்னை இருக்கிறதாம். அதனால் மே மாதம் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நான் எவ்வளவோ கேர்புல்லாக இருந்தாலும் என் கார் விபத்து அடிக்கடி நடந்து விடுகிறது,

அதனால் கடக ராசிக்காரர்கள், கார் விஷயத்துல ஜாக்கிரதையாக இருங்க என்று அந்த வீடியோவில் ஹேமா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

---- Advertisement ----