“அடிக்கடி உங்கள் வீட்டில் தூசி ஏற்படுகிறதா..!” – இனி இப்படி சுத்தம் செய்யுங்க..!

வீட்டை சுத்தப்படுத்துவது என்பது இல்லத்தரசிகளுக்கு தற்போது பெரிய தலைவலியாகவே உள்ளது. எப்படி சுத்தம் செய்தாலும் வீட்டில் அடிக்கடி தூசி படிந்து வருவதால் எப்படி எல்லாம் சுத்தம் செய்வது என்று திட்டம் போட்டு செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் அதிக அளவு தூசி வீடுகளில் இருந்தால் அவர்களுக்கு தூசியால் பல வியாதிகள் ஏற்படுவதோடு சுவாச பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Home cleaning tIps

எனவே வீட்டில் தூசிகள் அதிக அளவு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில முக்கிய குறிப்புகளை இந்த கட்டுரைகள் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக நீங்கள் உங்கள் படுக்கை அறையில் விரித்திருக்கும் பழைய படுக்கை விரிப்புகளை எப்போதும் அப்படியே வைக்காதீர்கள். முடிந்தவரை தூசியைத் தட்டி விட்டு புதிய படுக்கை உறைகளை போடுவது நல்லது. தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றுங்கள். ஏனெனில் அதிக அளவு தூசிகள் படியக்கூடிய இடம் எது என்று கேட்டால் தலையணையை கூறலாம்.

Home cleaning tIps

உங்கள் வீட்டு தரைகளில் இருக்கக்கூடிய மூலை முடுக்குகளில் தூசிகளை தினமுமே  பெருக்கி எடுப்பதின் மூலம் அதிக அளவு தூசி  சேர்வதை தடுக்க முடியும்.

--Advertisement--

வீட்டில் உள் நிலவக்கூடிய ஈரப்பதத்தை சற்று குறைவாக நீங்கள் பார்த்துக் கொள்வதின் மூலம் தூசிகள் படிவதை தடுக்க முடியும். மேலும் தூசி, பூச்சிகளை எளிதாக கட்டுப்படுத்த அறையில் ஈரப்பதத்தை நீங்கள் குறைக்க கூடிய வகையில் Dehumidifier எனப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம்.

தினமும் உங்கள் வீட்டுப் பொருட்களை துடைத்து வைப்பதன் மூலம் அதிக அளவு தூசிகள் படிவதை தவிர்த்து விடலாம். மேலும் உங்களிடம் வாக்கும் கிளீனர் இருந்தால் அதை வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்துவதின் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய முழுமையான தூசிகளை அகற்றி விட முடியும்.

Home cleaning tIps

சமையலறை அலமாரிகள் மற்றும் ரேக்குகளில் இருக்கக்கூடிய தூசிகளை அகற்ற நீங்கள் மைக்ரோ பைபர் துணியை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக தூசிகளை நீக்க முடியும். மேலும் கண்ணாடி பொருட்களை இது மிகவும் எளிதாக துடைக்க உதவி செய்யும்.

முடிந்தவரை தினமும் உங்கள் வீட்டு தரைகளை நீங்கள் துடைப்பதின் மூலம் அதிக அளவு தூசி ஏற்படாது. குறிப்பாக குழந்தைகளின் அறைகளில் நீங்கள் தரைகளை துடைப்பது அவசியம் அதுமட்டுமல்லாமல் அவர்கள் விளையாட்டுப் பொருட்களில் தூசி படியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.