“கோடையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சாக்லேட்..!” – செய்து கொடுத்து அசத்தலாமே..!

பொதுவாக சாக்லேட்டை வெறுக்கின்ற ஆட்களை இல்லை என்று கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பல வகைகளில் சாக்லெட்டுகள் கிடைத்தாலும் நமது வீட்டில் நாம் இந்த சாக்லேட்டை செய்து சாப்பிடும் போது உற்சாகத்தின் எல்லைக்கு அளவே இருக்காது.

Homemade Chocolate

அதுவும் வருகின்ற கோடையில் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அருமையான முறையில் ஹோம் மேட் சாக்லேட்டுகளை செய்து அசத்த எந்த பதிவை படித்தாலே போதும். நீங்களும் சாக்லேட்டை செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

ஹோம் மேட் சாக்லேட் செய்ய தேவையான பொருட்கள்

1.பால் பவுடர் இரண்டு கப்

2.சர்க்கரை 2 கப்

3.கோகோ பவுடர் ஐந்து டேபிள் ஸ்பூன்

4.தண்ணீர் தேவையான அளவு

5.வெண்ணெய் கால் கப்

Homemade Chocolate

செய்முறை

முதலில் நீங்கள் பால் பவுடர் மற்றும் கொக்கோ பவுடர் இரண்டையும் கலந்து கட்டி சேராமல் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதனை அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரையை சேர்த்து பாகினை தயார் செய்து கொள்ளவும். அந்த பாகானது ஒரு கம்பி பதம் வரவேண்டும்.

Homemade Chocolate

அப்படி ஒரு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இதனோடு வெண்ணையை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மேலும் இதில் சலித்து வைத்திருக்கும் பால் பவுடர் மற்றும் கொக்கோ பவுடரை சேர்த்து கட்டி ஏற்படாமல் கிளறவும்.

இதனை அடுத்து இந்த கலவையை நீங்கள் சாக்லேட் மோல்டில் சமமாக பரப்பில் ஆறவிடலாம். இல்லை என்றால் பட்டர் பேப்பரை பயன்படுத்தலாம்.மேலும் அரை மணி நேரம் கழித்த பிறகு சாக்லேட்டுகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் துண்டு போட்டு பரிமாறலாம்.

Homemade Chocolate

மேற்கூறிய வழிகளை நீங்கள் பின்பற்றி கோடை விடுமுறையில் உங்கள் பிள்ளைகள் மனது மகிழ இது போன்ற சாக்லேட்டை வித விதமான வடிவங்களில் செய்து கொடுத்து அவர்களை அசத்தி விடுங்கள்.