“உங்கள் முகத்தில் மரு இருக்கிறதா..!” – ஈஸியா இப்படி நீக்குங்க..!

உங்கள் அழகான முகத்தை சற்று மாற்றி காட்டும் விதத்தில் மருக்கள் அதிகளவு உள்ளதா? இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இதனை சரி செய்ய முடியவில்லை என்ற எண்ணம் ஏற்படுபவர்கள் இந்த பதிவை கட்டாயம் படியுங்கள்.

உங்கள் அழகான முகம் மட்டுமல்லாமல் சருமத்தில் அங்கங்கு கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் மருக்கள் ஏற்படும் இந்த மருகளை எப்படி நீக்குவது என்று தெரியாமல் சிலர் இதற்காக சிகிச்சைகளை போல மேற்கொண்டு வருகிறார்கள். இனிமேல் உங்கள் மருகை எளிதில் நீக்க நீங்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிதில் உங்கள் மருக்களை நினைக்கக்கூடிய வழிமுறைகளை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மருவை நீக்கக்கூடிய வழிமுறைகள்

நீங்கள் உங்கள் முகம் மற்றும் சருமங்களில் இருக்கக்கூடிய மருவை நீக்க உங்கள் வீட்டில் இருக்கும் வெங்காயம், கல் உப்பு, சூடம் இவற்றை பயன்படுத்தினால் போதுமானது.

இதற்காக நீங்கள் வெங்காயத்திலிருந்து வெங்காய சாறை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த வெங்காய சாறில் எடுத்து வைத்திருக்கும் சூடத்தை பொடித்து போட்டுக் கொள்ளுங்கள். அதுபோலவே கல் உப்பையும் போட்டு நன்கு கரையும் வரை காத்திருக்கவும்.

--Advertisement--

இது கரைந்த பிறகு ஒரு பட்ஸ் அல்லது பஞ்சினை கொண்டு இந்த கலவையை தொட்டு மருவிருக்கும் பகுதியில் வைத்து விடவும். இதனைத் தொடர்ந்து தினமும் நீங்கள் செய்து வருவதின் மூலம் உங்கள் முகத்தில் அல்லது சருமத்தில் இருக்கக்கூடிய மருக்கள் விரைவில் அப்படியே உதிர்ந்து கீழே விழுந்து விடும்.

இந்த கரைசலை நீங்கள் பயன்படுத்துவதால் எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாது. எனவே நீங்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். மேலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டால்  உடனே இதுபோல மரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுடன்  பகிர்ந்து விடுங்கள். அவர்களும் இதை ட்ரை செய்து நன்மை அடையட்டும்.