நடிகை கஜோலின் மகனா இது..? இவ்ளோ பெரிய மகனா.. பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

நடிகை கஜோலின் மகனா இது..? இவ்ளோ பெரிய மகனா.. பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா, இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்கள் அடிக்கடி விரும்பி கேட்கும் டிரண்டிங் பாடலாகவும், அடிக்கடி பலரும் முணுமுணுக்கும் பாடலாகவும் இருக்கிறது.

இந்த பாடல் காட்சியில் கஜோலும், பிரபுதேவாவும் நடனமாடியபடியே திடீர் என ஒரு கட்டத்தில் இருவரும் காதல் வசப்பட்டு விடுவர். இந்த பாடல் வரிகளும், படமாக்கப்பட்ட விதமும், காட்சிகளும் எப்போதுமே ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது.

கஜோல்

இந்த படத்தில்தான் அறிமுகமானார் கஜோல். கிறிஸ்தவ பெண்ணான அவரை, தாமஸ் என்ற கேரக்டரில் நடித்த அரவிந்த் சாமி மிக ஆழமாக காதலிப்பார். அவரிடம் காதலை சொல்ல, பிரபுதேவா மூலம் உதவி கேட்பார். கடைசியில் தூது போன பிரபு தேவாவுக்கும், கஜோலுக்கும் காதல் வந்துவிடும்.

இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத் தாமரை மகளே பாடல், எஸ்பி பாலசுப்ரமணியம் குரலில் தேன் மதுரமாக இருந்தது. இந்த பாடலை பாடியதற்காக எஸ்பிபிக்கு தேசிய விருது கிடைத்தது.

வேலையில்லா பட்டதாரி 2

இந்த படத்துக்கு பிறகு தொடர்ந்து கஜோல் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் மின்சாரக் கனவு படத்துக்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழிந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், வசுந்தரா தேவி என்ற மாஸ் ஆன தொழிலதிபர் கேரக்டரில் கஜோல் நடித்திருந்தார்.

சாதாரண என்ஜினியர் தனுஷிடம், மிகப்பெரிய கட்டுமான நிறுவன தொழிலதிபர் கஜோல் சவால்விட்டு இறுதியில் தோற்றுப் போவதுதான் கதை. இந்த படத்திலும் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

இதையும் படியுங்கள்: டி ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்… தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

அஜய் தேவ்கன்

அவர் பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் அதிக படங்களில் நடித்தார். தொடர்ந்து இப்போதும் இந்தியில் செம கிளாமராக கஜோல் நடித்து வருகிறார்.

பாலிவுட் ஸ்டார் நடிகரான அஜய் தேவ்கனை, கஜோல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.

50 வயதுகளை நெருங்கிய நிலையிலும், சினிமா நிகழ்ச்சிகள், விருது விழாக்களுக்கு கஜோல் அதிரி புதிரியான கவர்ச்சியில் வருவது கண்டு, இந்திப்பட ரசிகர்கள் சொக்கிப் போய் கிடக்கின்றனர்.

இதில் கஜோல் மட்டுமின்றி அவரது மகளும் இதேபோல் ஏகப்பட்ட கவர்ச்சியில்தான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகன் புகைப்படங்கள்

ஏனெனில் கஜோல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜய் தேவ்கன், கஜோல் தம்பதியின் மகன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அட நடிகை கஜோல் மகனா இது, இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா, என ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.