என்ன சொல்றீங்க..? – MGR-க்கு கமல்ஹாசன் செய்த விஷயம்..! – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

மக்கள் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திரை உலகில் அற்புதமான பணிகளை செய்திருப்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் தான் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார்.

நல்ல நடிகராக திகழ்ந்த கமலஹாசன் தான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த நடன கலைஞராகவும் திகழ்ந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சினிமாவில் பல கோணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர்.

Kamal

அந்த வகையில் இவர் ஒரு சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல துறைகளில் பணியாற்றி இருக்கிறார். ரஜினிகாந்த் க்கு முன்பே கமலஹாசன் தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு நடிகர் என்பது யாராலும் மறுக்க முடியாது.

மேலும் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த போதே இவரது நடிப்பை பார்த்து எம் ஜி ஆர் மட்டுமல்லாமல் சிவாஜி கணேசனும் வியந்து பார்த்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆருக்கே கமலஹாசன் நடனம் கற்றுத் தந்த நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் அரங்கேறியது எத்தனை பேருக்கும் தெரியும் என்பது தெரியவில்லை.

--Advertisement--

Kamal

மேலும் தன்னுடைய தனி திறமையால் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்த கமலஹாசன் அதன் பிறகும் தன் திறமையை வளர்த்தியப்படியே தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக இன்று வரை நிலைத்து இருக்கிறார்.

மேலும் ஆரம்ப காலகட்டத்தில் நடனத்தில் கவனத்தை செலுத்து வந்த கமலஹாசன் தங்கப்பன் என்ற டான்ஸ் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்து நடனத்தை நல்ல முறையில் கற்றுக் கொள்ள நினைத்து இருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் அவரிடம் நடனத்தை கற்றுக் கற்றுக்கொண்ட பிறகு இவர் 1971 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த நீரும் நெருப்பும் திரைப்படத்தில் இவரது குருவான தங்கப்பன்னுக்கு உதவி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய போது எம்ஜிஆருக்கு நடனத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

Kamal

மேலும் கமலஹாசன் தன்னுடைய 17 வது வயதில் நீரும் நெருப்பும் படத்தில் எம்ஜிஆருக்கு நடனத்தை கற்றுத் தரும் அளவுக்கு நடனத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது மிகப்பெரிய விஷயமாக அனைவராலும் போற்றப்படுகிறது.

மேலும் இவர் நடன ஆசிரியராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் பல வகைகளில் இன்று சினிமா துறையில் ஒரு எண்சைக்ளோபீடியாவாக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தை தான் காரணம் என்று நாம் கூற முடியும்.