Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில்..!” – நீங்களும் ஒரு முறை போய் வாங்க..!

 வாழ்க்கையில் எண்ணற்ற துயரங்களை சந்தித்து வரக்கூடிய மக்கள் எந்த கோயிலுக்கு சென்று பரிகாரங்களை செய்வதின் மூலம் வாழ்க்கையில் மேம்பட முடியும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் கட்டாயம் கேரளாவில் திருச்சூருக்கு அருகில் இருக்கக்கூடிய  பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வந்தாலே நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

 குடும்பத்தின் நிலவும் குழப்பம்,  ஏவல், பில்லி, சூனியம் மற்றும் மன தடுமாற்றங்களை சரி செய்து தரக்கூடிய அற்புத ஆற்றல் படைத்த காளியம்மனின் ரூபமாக கொடுங்கல்லூர் பகவதி அம்மன் திகழ்கிறாள்.

 பார்ப்பதற்கே வித்தியாசமான முறையில் தரிசனம் தரக்கூடிய வகையில் எழுந்து அருளியிருக்கும் இருக்கும் இந்த அம்மனுக்கு தினமும் தினமும் பூஜைகள் தவறாமல் நடைபெற்று வருகிறது.

 குறிப்பாக செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கூட்டம் அலைமோதும் என்று கூறலாம். இந்தக் கோயிலில் தங்களது நேர்த்திகளை நிறைவேற்ற பக்தர்கள் அனைவரும் நெய் விளக்கு ஏற்றி வழிபாடுகளை செய்து வருகிறார்கள்.

இங்கு அதிகாலை நாலு மணிக்கு ஆரம்பிக்கும் திருக்கோயில் பூஜைகள் மதியம் 12 மணி வரை நிகழும் பின் மாலை நான்கு மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நித்திய வழிபாடுகள் நடைபெறும்.

--Advertisement--

 நீங்களும் உங்கள் குறைகளை போக்க நினைத்தால் கட்டாயம் ஒரு முறை எந்த பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள். அதன் பின் உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

 எத்தனை மனக்கலக்கம், மனச்சுமைகள் இருந்தாலும் அந்த கோயிலுக்கு சென்றவுடன் நீங்கள் பகவதி அம்மனை தரிசித்தால் அனைத்தும் அத்துடன் நீங்கி உங்கள் மனம் லேசாகும். இங்கு வெடி வழிபாடுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

தன்னை நம்பி வரும் மக்களின் குறைகளை போக்குவதில் இந்த அம்பிகைக்கு அதிக சக்தி உண்டு.மேலும் விழா கால பூஜைகள் கடும் விமர்சையாக இந்த அம்மனுக்கு கொண்டாடப்படுகிறது.

 இந்த சமயத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்துவார்கள். எனவே உங்கள் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க நீங்கள் உடனடியாக கொடுங்கல்லூரில் இருக்கும் பகவதியை சென்று பாருங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top