Health | உடல்நலம்
” நாள்பட்ட சளியால் கடும் வேதனையா..!” எளிதாக சளி வெளியேற கற்பூரவள்ளி ஒன்றே போதும்..!
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி பிடித்தால் சனியன் பிடித்தது போல சீரழிந்து சிரமப்படுவார்கள். மேலும் இந்த சளி காரணமாக எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படும்.
மூக்கடைத்துக்கொண்டு மூச்சு விட முடியாமல் சிரமப்படக் கூடியவர்கள் நாள்பட்ட சளியை எளிதில் வெளியேற்ற உங்கள் வீட்டில் வளர்த்து வரும் கற்பூரவள்ளி செடி ஒன்றே போதுமானது.
இந்த கற்பூரவள்ளி செடிக்கு நாள்பட்ட சளியை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் அதிக அளவு உள்ளது. கற்பூரவள்ளி இலை சாறு எடுத்து அதனோடு பனங் கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் மற்றும் சளி நீங்கும்.
கற்பூரவள்ளி இலை, தூதுவளை இலை, வல்லாரை இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி 100 மில்லி தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி எளிதில் மலத்தில் வெளியேறிவிடும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் நீங்குவதற்காக கற்பூரவள்ளி இலை சாறினை 5 மில்லி அளவுக்கு கொடுத்து வந்தால் அவர்களுக்கு ஏற்படும் மாந்தம் விரைவில் குணமாகும்.
பெரியவர்கள் காலை நேரத்தில் ஒரு பத்து இலை கற்பூரவள்ளி, ஐந்து மிளகு ஆகியவற்றை வெறும் வயிற்றில் அப்படியே மென்று தின்பதன் மூலம் நெஞ்சு சளி நுரையீரலில் கட்டி இருக்கும் சளி போன்றவை வெளியேறிவிடும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவு ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த கற்பூரவள்ளி செடிக்கு இருப்பதால் தினமும் இதனை நீங்கள் ஒன்று அல்லது இரண்டு இலைகள் அப்படியே மென்று உண்பதின் மூலம் உங்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாகும்.
அதுமட்டுமல்லாமல் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவு ஆன்டி-ஆக்சைடுகளை கொண்டிருக்கக் கூடிய இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிக அளவு காணப்படுகிறது.இது ரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ராலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
மேலும் கற்பூரவள்ளியில் கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், கால்சியம் வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை இருப்பதின் காரணமாக தினமும் ஒரு இலையை பச்சையாக சாப்பிட குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை அவர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும்.