விஜயகுமார் 2வது மனைவி திடீரென மரணம் அடைந்த காரணம் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். இவர் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல். இப்போது அஜித் விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

விஜயகுமார் முதல் திருமணம்

விஜயகுமார் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தார். அவருக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். அதில் மகன்தான் நடிகர் அருண் விஜய்.

அதன் பிறகு சினிமாவில் விஜயகுமார் நடிக்க வந்த பிறகு, பல படங்களில் நடித்து பிரபலமானார். அப்போது உன்னிடம் மயங்குகிறேன் என்ற படத்தில் நடித்த போது, நடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

அப்போது ஒரு மதியநேர இடைவேளையின் போது, மஞ்சு, உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என, தனது விருப்பத்தை மஞ்சுளாவிடம் விஜயகுமார் நேரடியாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நிலையில், அப்போது பதில் அளிக்காத மஞ்சுளா, பிறகு என் பெற்றோரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

--Advertisement--

பிறகு மஞ்சுளாவின் பெற்றோரை நேரில் சந்தித்து விஜயகுமார் பேசியபோது, நீங்கள் நேர்மையாக வெளிப்படையாக கேட்டது, எங்களுக்கு பிடித்திருக்கிறது. திருமணத்திற்கு சம்மதம் என்று கூறிவிட்டனர்.

மஞ்சுளாவுடன் 2வது திருமணம்

அதன் பிறகு மஞ்சுளாவை, விஜயகுமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மஞ்சுளா ஆலப்பாக்கம் வீட்டில், விஜயகுமாருடன் வாழ்ந்து வந்தார். அது மட்டுமின்றி விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு மற்றும் அந்த குடும்பத்தினருடன் மஞ்சுளா சகஜமாக, இணக்கமான சூழ்நிலையில் இருந்து வந்தார்.

59 வயதில் உயிரிழந்தார்

இந்நிலையில், மஞ்சுளாவுக்கு 59 வயதான நிலையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. திடீரென கடந்த 2013 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் நடிகை மஞ்சுளா உயிரிழந்தார்.

நுரையீரல் தொற்று

அவர் ஏற்கனவே நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், ஒருநாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது கட்டில் இருந்து உருண்டு கீழே விழுந்து விட்டார்.

கட்டிலில் இருந்து கீழே விழுதல்

அப்போது கட்டில் கம்பி அவரது வயிற்றில் குத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையும் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவரது சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

அதன் பிறகு தனது மூத்த மனைவி முத்துக்கண்ணு உள்ளிட்ட குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் நடிகர் விஜயகுமார்.

சிறுநீரகங்கள் பாதிப்பு

விஜயகுமார் 2வது மனைவி மஞ்சுளா திடீரென மரணம் அடைந்ததற்கு காரணம் அவருக்கு இருந்த நுரையீரல் தொற்றும், கட்டிலில் இருந்து விழுந்த போது வயிற்றில் ஏற்பட்ட காயமும், கடைசி நேரத்தில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதும் தான் என்ற பலரும் அறியாத ரகசியங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.