Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கையில் வைக்கும் மருதாணி அதிகம் சிவப்பாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பொதுவாகவே பெண்கள் அனைவரும் கை மற்றும் கால்களில் மருதாணி வைப்பதை மங்களகரமாக நினைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த மருதாணி சிவப்பாக இருப்பதன் காரணமாக அது பெண்களுக்கு மேலும் கை மற்றும் கால்களை அழகாக காட்டித் தரும்.

அப்படி நீங்கள் மருதாணியை வைக்கும் போது உங்கள் கைகளில் நல்ல சிவப்பாக நிறம் மாற நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அப்படி தெரியாது என்றால் நீங்கள் இந்த முறைகளை பயன்படுத்தி உங்கள் வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ இருக்கும் மருதாணி இலைகளை அரைக்கும் போது இந்த பொருட்களை போட்டு அரைத்து உங்கள் கைகளில் வைத்தால் கூடுதல் சிவப்பு நிறத்திற்கு உங்கள் கைகள் மற்றும் கால்களில் வைக்கக்கூடிய மருதாணியின் தன்மை இருக்கும்.

மருதாணி அதிக அளவு சிவக்க சில குறிப்புக்கள்

நீங்கள் மருதாணியை அரைக்கும் போது நன்கு அரைத்து அதனோடு சிறிதளவு எலுமிச்சம் சாறு கலந்து உங்கள் கைகள் மற்றும் கால்களில் வைக்கும் போது கருப்பு நிறம் ஏற்படாமல் சிவப்பு நிறத்தோடு காட்சியளிக்கும்.

மருதாணி  இலையை நீங்கள் பறித்த உடனேயே அரைத்து, அரைத்த உடனேயே உங்கள் கைகளில் வைப்பதின் மூலம் அதன் இயல்பு நிறம் அப்படியே உங்களுக்கு கிடைக்கும்.மேலும் நாள் பட்ட மருதாணி அல்லது மூன்று மணி நேரங்கள் கழித்து நீங்கள் மருதாணியை வைக்கும் போது இயல்பான நிறம் கிடைப்பது அரிதாகிவிடும்.

--Advertisement--

மேலும் மருதாணியை நீங்கள் அரைக்கும் போது அதனோடு ஒரு கொட்டை பாக்கை வைத்து அரைத்து வைப்பதன் மூலமும் மருதாணி செக்கச் சிவப்பாக உங்கள் காய்களிலும் கால்களிலும் ஜொலிக்கும்.

மருதாணி இலையை அரைத்து விட்டு அதனோடு நீங்கள் சிறிதளவு டீச்சாறை கலந்து பிறகு உங்கள் கை மற்றும் கால்களில் வைப்பதின் மூலம் மருதாணி மிக நன்றாக சிவக்கும்.

பெண்கள் மங்களகரமாக நினைக்கக்கூடிய இந்த மருதாணியை நீங்கள் வைப்பதின் மூலம் உங்கள் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். நகங்களில் சொத்தை ஏற்படுவது தடுக்கப்படும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவி செய்யும்.

இந்தக் கோடையில் நீங்கள் மருதாணியை வைப்பதன் மூலம் உங்கள் உடல் குளிமையாவதோடு உங்கள் கால் மற்றும் கை நகங்கள் மிக அழகாக மாற மருதாணியை நீங்கள் வைத்து பயன் பெறலாம்.

Continue Reading
 

More in

Trending Now

To Top