Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

” அடடா குடிக்கிற பால்-லுல இத்தனை அழகு டிப்ஸா..!” – பெஸ்ட் ரிசல்ட்க்கு யூஸ் பண்ணுங்க..!!

 சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் இன்றி அமையாத ஊட்டச்சத்தாக இருக்கிறது.அதுமட்டுமில்லாமல் நீங்கள் அறியாத அழகு பொக்கிஷமாக இந்த பால் இருக்கிறது.

இந்தப் பாலினை கொண்டு கீழே கூறப்பட்டிருக்கும் குறிப்பு படி நீங்கள் பயன்படுத்துவது மூலம் உங்கள் சரும அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் குறை இல்லாமல் நீங்கள் இளமையை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள உதவி செய்யும் எந்த பாலினை நீங்கள் பக்குவமாக பயன்படுத்தினால் என்றும் இளமை மாறாமல் சரும அழகோடு ஜொலிக்கலாம்.

 தினமும் ஒரு சில நேரங்கள் நீங்கள் ஓய்வாக இருக்கும் போது பாலை உங்கள் முகத்தில் தடவி வர வேண்டும். அப்படி தடவி ஒரு கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவினால் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் வராமல் இருக்கும்.

 அது மட்டுமல்லாமல் இந்த பாலானது உங்கள்  சுருங்கிய சருமத்தை சுருக்கு விழாமல் பாதுகாப்பதோடு முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவி செய்வதால் முகம் புத்துணர்வோடு பளபளப்பாக இருக்கும்.

--Advertisement--

 முகத்தில் எண்ணெய் பிசுக்கால் படாத பாடு படுபவர்கள் பாலினை முகத்தில் தேய்த்து வந்தால் இறந்த செல்களை அப்படியே வெளியேற்றி விடுவதின் மூலம் முகம் பொலிவோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் முகத்தில் ஆரோக்கியம் மிளிரும்.

 சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் பாலுக்கு உள்ளது. எனவே தினமும் நீங்கள் பாலனைத் தடவி உங்கள் மேனியை யூவி கதிர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 சரும நிறமாற்றத்தை நீக்கக்கூடிய தன்மை இந்த பாலுக்கு இருப்பதால் நீங்கள் பாலினை பயன்படுத்துவது நல்லது. மேலும் முகத்தில் ஏற்படும் தடிப்புகள் சரும அரிப்புகள் போன்றவற்றை இது குணப்படுத்தும்  ஆற்றல் பாலில் இருக்கும் லாக் அமிலத்தில் உள்ளது. சரும வறட்சியை தடுக்கிறது.

இதனால் சரும வறட்சியினால் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகள் ஏற்படுவதில்லை. எனவே நீங்கள் பாலை பருகுவதோடு மட்டுமல்லாமல் இது போல செய்வதால் உங்கள் சருமத்தை பாதுகாத்து எண்ணற்ற பயன்களை பாலின் மூலம் பெற முடியும்.

முடிந்தால் இந்த குறிப்புக்களை நீங்கள் ஃபாலோ செய்து அதனால் கிடைத்த நன்மைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

Continue Reading
 

More in

Trending Now

To Top