மும்பைக்கு வந்த மற்றும் ஒரு சோதனை..இந்த பவுலர் வெளியேறுகிறார்..!!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே அடிமேல் அடி வாங்கி வருகிறது. கடந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்த ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என யோசித்து வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பலரும் ஒரு பக்கத்தில் பும்ரா இன்னொரு பக்கத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் என நாங்கள் தெறிக்க விடப் போகிறோம் என சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் அவர் காயத்தை கவனித்து அவருக்கு சுழற்சி முறையில் விளையாட வைப்போம் என மும்பை அணி நிர்வாகம் கூறியது. இந்த நிலையில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த பிக் பேஷ் தொடரில் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் ரிச்சர்ட்சன் ஓய்வில் இருந்தார்.
பெர்த் அணியின் முக்கிய நாக் அவுட் போட்டிகளில் கூட ரிச்சர்ட்சன் விளையாட வில்லை. அதன் பிறகு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா உள்ளூர் விளையாட்டு போட்டியில் பங்கேற்று மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால் அந்தப் போட்டி முடிந்த உடனே ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றார். இந்த நிலையில் காயத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் அவர் கிரிக்கெட்டில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த ரிச்சர்ட்சன் தற்போது விலகி உள்ளார்.

--Advertisement--

மேலும் ஐபிஎல் தொடரிலும் ரிச்சர்ட்சன் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட்சன் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி ஏலத்தில் வாங்கி இருந்தது. தற்போது பும்ராவும் ரிச்சர்ட்சனும் இல்லாததால் மும்பை அணி ஜோப்ரா ஆர்ச்சர் கேமராக்கிரீன் மற்றும் ஜேசன் பெகுரண்டாப் ஆகியோரை வைத்து தான் வேகப்பந்து வீச்சை சமாளிக்க வேண்டும்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி தான் ஐபிஎல் தொடரில் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் குமராவும் இல்லாததால் மும்பை அணியில் அனுபவம் வாய்ந்த இந்திய தேகப்பந்துவீச்சாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.