“சுவைக்க சுண்டி இழுக்கும் நெத்திலி மீன் குழம்பு..!” – இப்படி செய்யுங்க..!!

 அசைவப் பிரியர்களுக்கு மீன் என்றாலே அலாதி சுகம் தரும் என்று கூறலாம். அப்படிப்பட்ட மீனில் மீன் குழம்பு செய்தால் அவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அதுவும் கிராமத்து ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது தனி சுவையை  கொடுப்பதோடு இன்னும் இன்னும் வேண்டும் என கேட்கத் தூண்டும்.

 அந்த வகையில் இன்று கிராமத்தில் செய்யக்கூடிய நெத்திலி மீன் குழம்பை எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 கிராமத்து நெத்திலி மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

1.நெத்திலி மீன் அரை கிலோ

2.எண்ணெய்

3.டேபிள்ஸ்பூன்

--Advertisement--

4.வெந்தயம் அரை ஸ்பூன்

5.சின்ன வெங்காயம்

6.பூண்டு

7.கருவேப்பிலை

8.உப்பு தேவையான அளவு

மசாலா தயாரிக்க

9.எண்ணெய் இரண்டு ஸ்பூன்

10.சின்ன வெங்காயம் 150 கிராம்

11.பூண்டு

12.தக்காளி இரண்டு

13.மல்லித்தூள் மூன்று டீஸ்பூன்

14.மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன்

15.மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

செய்முறை

முதலில் நெத்திலி மீனை நீங்கள் நன்றாக சுத்தம் செய்து கொண்டு அதை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனோடு உப்பு,மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவை மூன்றையும்  மூன்றையும் போட்டு நன்கு கலந்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் புளியை ஊற வைத்துக் கொள்ளுங்கள். மசாலாவை தயார் செய்வதற்கு ஒரு மண் சட்டியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் முழு சின்ன வெங்காயம் பூண்டு போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

 இது வதங்கிய பிறகு இதில் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளிகளை சேர்த்து வதக்கி விடுங்கள். இதனை அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொண்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி விடவும்.

 இதனை அடுத்து இதை ஆறவிட்டு பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் அதே மண் சட்டியில் எண்ணெயை ஊற்றி அதில் வெந்தயம் போடவும்.

இந்த வெந்தயம் பொரிந்த பிறகு கருவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கி விடுங்கள். இப்போது இது நன்கு வதங்கிய பிறகு நீங்கள் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு நன்கு கிளறி விடவும்.

 இப்போது கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலாக இதில் சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் நீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள்.

 இது கொதித்து வரும் வேளையில் ஊற வைத்து இருக்கக்கூடிய மீனை அப்படியே கொட்டி நான்கு முதல் பத்து நிமிடங்கள் கொதிவிட்டு இறக்கினால் கிராமத்து சுவையில் நெத்திலி மீன் குழம்பு தயார்.