” தினமும் பயன்படுத்தும் காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள்..!” – இருக்கிறது பார்க்கலாமா?

அன்றாடம் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் பலவிதமான காய்கறிகளில் பலவிதமான சத்துக்கள் அதிகளவு நிரம்பி உள்ளது. இந்த சத்துக்கள் மூலம் நமது ஆரோக்கியம் பெருமளவு பாதுகாக்கப்படுகிறது. அப்படி சத்து நிறைந்த காய்கள் பற்றியும் அதில் இருக்கும் சத்துக்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முருங்கைக்காயில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு சத்து அதிகமாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய அதிக அளவு உதிரப்போக்கை தடுப்பதோடு ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய தன்மை  முருங்கைக்காய்க்கு உள்ளது.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அடிகளவுள்ளது.எனவே உணவில் சுண்டைக்காயை வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் சேர்த்துக் கொள்வதின் மூலம் வயிற்றுக்குள் இருக்கும் புழுக்கள் செத்துப் போகும். அதுமட்டுமல்லாமல் புற்று நோயை எதிர்க்கின்ற ஆற்றல் இந்த சுண்டைக்காய் உள்ளது. மேலும் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அற்புத காரணியாக இந்த சுண்டைக்காய் விளங்குகிறது.

கொத்தவரங்காயில் அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பர சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் கொத்தவரங்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் இன்சுலின் பற்றாக்குறைவிலிருந்து தப்பிக்க முடியும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த கொத்த வரங்காய்க்கு உள்ளது.

கத்திரிக்காயில் அதிக அளவு இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளது.இது செரிமான சக்தியை தூண்டி விடக் கூடிய ஆற்றல்  கத்திரிக்காயில் உள்ளதால் தினமும் நீங்கள் இதை உணவில் அதிகளால் சேர்த்துக் கொள்வதின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களையும் குறைக்கக்கூடிய ஆற்றல் இந்த கத்திரிக்கு உண்டு.

--Advertisement--

பாகற்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. மேலும் இதில் கால்சிய சத்தும் நிறைந்து உள்ளதால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

மேலும் பசியை தூண்டக்கூடிய அற்புத சக்தி படைத்த பாகற்காய் வயிற்றில் இருக்கும் புழுக்களையும் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் பாகற்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.