Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பொன்னி நதி பாக்கணுமே..”ஈ..ஆரி.. எச.. மாரி..” அர்த்தம் இது தானா..? பாருப்பா..!

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சம் மிக்க வரலாற்று உண்மை சம்பவங்கள் சரித்திர கதைகள் திரைப்படங்களாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்ட வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படங்கள்:

வரலாற்று நாடக திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரித்திருந்தது.

இப்படம் தமிழ் எழுத்தாளரான கல்வியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருந்தது.

--Advertisement--

படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின், சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

இவர்களுடன் சரத்குமார் , பார்த்திபன் , பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளி பதிவு செய்து மிக பிரம்மாண்டமான படமாக வெளியிட்டு இருந்தார்கள்.

குழந்தைகள் முதல் பெரிய வருவார்கள் வரை. இந்த சரித்திர வரலாற்று படத்தை பார்த்து கண்டு களித்தார்கள்.

பாடலில் புதைந்து கிடைக்கும் சுவாரஸ்யங்கள்:

இந்நிலையில் தற்ப்போது யாருக்கும் தெரிந்திராத ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பொன்னி நதி பாக்கணுமே” என்ற பாடல் ஒன்று இடம் பெற்று இருக்கும்.

அந்த பாடல் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாடலில் ‘ஈ ஆரி எச மாரி’ என்ற கோரஸ் குரலுக்கு பின்னர் ஒரு மிகப்பெரிய அர்த்தம் புதைந்திருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.

‘பொன்னி நதி பாக்கணுமே ஈஆரிஎசமாரி’ என்ற இப்பாடலை ஏ ஆர் ரகுமான் பாடியிருந்தார். இந்த பாடல் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார்.

“ஈ ஆரி எச மாரி” கோர்ஸின் அர்த்தம்;

இப்பாடலில் வரும் ‘ஈ ஆரி எச மாரி’ என்ற கோரஸ்’ பாட்டு முழுக்க ஒலித்துக் கொண்டே இருக்கும். இது பாடலின் அழகுக்காக சேர்க்கப்பட்ட சொற்கள் என்று தான் பலரும் நினைத்திருக்கிறார்கள்

நார்மலாக அந்த பாடலுக்கு ஒரு ஹம்மிங் அந்த இசைக்கு ஏற்றவாறு செய்கிறார்கள் என்று தான் நினைத்திருப்போம் ஆனால் உண்மையில் அது இல்லை .

அந்த கோர்ஸுக்கு மிகவும் அழுத்தமான பொருள் இருக்கிறது. மியூசிக் ஆக ஏதோ ஒன்னு எழுதி இருக்காங்க என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

“ஈ ஆரி எச மாரி”

ஈ – வில்,அம்பு,ஈட்டி

ஆரி-வீரன்

எச- இசை

மாரி – மழை

அதாவது, “வில் வீரனின் இசைமழை” என்று அர்த்தம். இந்த அழகான சொற்களைத்தான் சோழர்களின் பெருமையை சொல்லும் விதமாக இளங்கோ அவர்கள் சோழர்களின் பாடலில் கூறியிருக்கிறார்.

சாதாரணமாக ஒலிக்கும் அந்த கோரசுக்கு பின் இவ்வளவு ஆழ்ந்த அர்த்தங்கள் புதைந்து கிடைப்பதை அறிந்த ரசிகர்கள் வியந்து போய்விட்டார்கள்.

இப்படித்தான் பொன்னியின் செல்வன் ஆன வரலாற்று திரைப்படத்தில் ஒவ்வொன்றும் சிறப்பு அம்சம் நிறைந்ததாக பார்த்து பார்த்து எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top