அந்த விஷயத்துக்கு நான் தகுதியானவள் அல்ல.. ஓப்பனாக பேசிய பூஜா ஹெக்டே..!

பெரும்பாலானவர்கள் கடைகளுக்கு சென்றால் அந்த கடைகளில் உள்ள பொருளை பேரம் பேசி வாங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட விலை என்றால் அது குறைத்து கேட்பது வழக்கமாக இருக்கும்.

டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ஷாப்பிங் மால்கள்

ஆனால் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், ஷாப்பிங் மால்களின் இது போன்ற விலை குறைப்பு விஷயங்கள் நடக்காது. ஏனென்றால், அவர்கள் அந்த பொருளின் மீது விலை குறித்த ஸ்டிக்கர் பார்கோடு ஒட்டி வைத்திருக்கிறார்கள். அந்த விலை தான் பில்லிலும் வரும். எனவே அந்த இடங்களில் பேரம் பேசுவது என்பது நிச்சயமாக நடக்காத விஷயமாக இருக்கிறது.

மிக சாதாரணமான கடைகளில், சின்ன கடைகளில் ஒரு பொருளை வாங்கும் போது அதை விலையில் பேரம் பேசி வாங்குவது பலரும் வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் எல்லா கடைகளிலுமே ஒரே விலை என்பதை முன்பே எழுதி வைத்து விடுகிறார்கள். எந்த பேரமும் அங்கு பேச முடியாது.

பேரம் பேசலாம்

ஆனால் பிளாட்பார்ம் கடைகளிலும், ரோட்டோர வியாபாரிகளிடமும் பேரம் பேசி பொருள் வாங்கலாம். இது சாதாரண மக்களுக்குதான் சாத்தியம்.

--Advertisement--

ஏனெனில் பெரும்பாலும் நடிகர், நடிகைகள் அவர்கள் ஸ்டேட்டஸுக்கு இதுபோல் பேரம் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் இல்லை.

அது மட்டுமின்றி நடிகர் வீடுகளில் உள்ள ஊழியர்கள், அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்குவார்கள். ஷாப்பிங் செய்வார்கள். நடிகர், நடிகைகள் டைரக்டாக வந்து கடைகளில் பர்சேஸ் செய்வது என்பது மிக மிக குறைவுதான்.

பூஜா ஹெக்டே

ஆனால் பிரபல நடிகை பூஜா ஹெக்டே சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆச்சரியப்படும் விதமாக இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

பீஸ்ட் பட நாயகி

இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு, நெல்சன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் என்ற 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மற்றபடி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிக படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாமிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நேர்காணலில் பூஜா ஹெக்டே கூறியதாவது

பேரம் பேசி பொருள் வாங்குவதில் நான் மிகவும் மோசமானவள். ஏதாவது ஒரு பொருள் பார்க்கிறேன். அதனுடைய விலை ஒன்று சொல்கிறார்கள் என்றால் உடனே அதனை கொடுத்துவிட்டு வாங்கி விடுவேன். அந்த பொருள் அந்த விலைக்கு உகந்ததா..? என்றெல்லாம் யோசிக்க மாட்டேன்.

ஒரே வேடிக்கை

உதரணமாக, ஒரு பொருளை பார்க்கிறேன் 200 ரூபாய் என்று கூறுகிறார்கள் என்றால் உடனே 200 ரூபாய் கொடுத்தது நான் வாங்கிக் கொள்வேன். ஆனால் என்னுடைய நெருங்கிய தோழி மித்தியுடன் ஷாப்பிங் சென்றால் ஒரே வேடிக்கையாக இருக்கும்.

திட்டப் போறாங்க…

உதாரணத்துக்கு ஒரு பொருள் 200 ரூபாய் சொல்கிறார்கள் என்றால் அதனை 50 ரூபாய்க்கு கொடுக்க முடியுமா..? என்று கேட்பாள். அவளுக்கு அருகில் நான் நின்று கொண்டு 200 ரூபாய் சொல்கிறார்கள்.. நீ வெறும் ஐம்பது ரூபாய்க்கு கேக்குறியே.. ஏதாவது திட்டப் போறாங்க.. வா போலாம்.. என்று கூறுவேன்.

அதனை தொடர்ந்து கடைக்காரர் ஐம்பதிலிருந்து முன்னே பின்னே விலை பேசி கடைசியாக 70 ரூபாய்க்கு அந்த பொருளை மித்தி வாங்கிக் கொண்டு வருவார். நானாக இருந்தால் அதனை 200 ரூபாய் கொடுத்து இருப்பேன். எனவே நான் பேரம் பேசி வாங்குவதற்கு தகுதியானவர் அல்ல என கூறியிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

பேரம் பேசி பொருள் வாங்கும் விஷயத்துக்கு நான் தகுதியானவள் அல்ல என்று ஓப்பனாக பேசிய பூஜா ஹெக்டேவை பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.