இப்படி இருந்தால் தான் குத்துவேன்.. மற்றவர்கள் போல இல்லை.. பச்சை குறித்து ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

இப்படி இருந்தால் தான் குத்துவேன்.. மற்றவர்கள் போல இல்லை.. பச்சை குறித்து ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரை சீரியல்களில் அதிகளவு நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்டவர். இவர் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

பச்சை குறித்து ரச்சிதா மகாலட்சுமி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி 2013ல் அதே தொலைக்காட்சியில் பிரிவும் சந்திப்போம் என்ற தொடரில் ஜோதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.


இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு இளவரசி சீரியலில் மகா கதாபாத்திரத்தை ஏற்று சன் டிவியில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பல சீரியல்கள் மட்டும் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் இன்று இருக்கும் திரைப்பட நடிகைகள் மற்றும் நடிகர்கள் பச்சை குத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ரச்சிதா எதற்காக பச்சை குத்துகிறார் என்பதையும் இப்படி இருந்தால் தான் குத்துவேன் மற்றவர்களைப் போல நான் ஒரு பேஷனாக இதை செய்யவில்லை என்று ஓபனாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் ரச்சிதா மகாலட்சுமி பச்சை குத்துவது பற்றி கூறிய தனது அனுபவங்களை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருந்தா தான் குத்துவேன்..

ரச்சிதா மஹாலட்சுமியை பொறுத்த வரை பச்சை குத்துவதை பெருமையாக பேசி விடுவதோடு மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அது என் கூடவே இருக்க வேண்டிய விஷயமாக கருதுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இவர் தியேட்டர் மாஸ்க் என்று சொல்லப்படும் மைலி ஃபேஸ் மற்றும் அது சம்பந்தமான டாட்டூக்களை தான் போட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். குறிப்பாக கழுத்துக்கு கீழ் இருக்கக்கூடிய முதுகுப் பகுதியில் இருப்பதாக சொன்னார்.


மேலும் இவர் பணியாற்றக்கூடிய துறையை இவர் மிகவும் நேசிப்பதின் காரணத்தால் தான் இது போன்ற டாட்டூக்களை குத்தி வருவதாக கூறியிருக்கும் இவர் மேலும் இந்த பச்சையானது அவர் வாழ்நாள் முழுவதும் தன்னோடு இருக்க வேண்டும் என்று கருதுவதால் தான் இருந்த பச்சையை குத்தி வருகிறாராம்.

மேலும் பட்டாம்பூச்சி, பூ போன்ற டாட்டூக்களை இவர் அதிகளவு விரும்புவது இல்லை. நான் குத்தக்கூடிய பச்சையில் கூட ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைப்பதாக கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.


இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் டாட்டூக்களை குத்துவதில் கூட இப்படி ஒரு லட்சியத்தை ரச்சிதா மகாலட்சுமி வைத்திருக்கிறார். மற்றவர்களைப் போல அல்லாமல் தனித்துவத்தோடு இப்படி இருந்தால் மட்டும் தான் பச்சையை குத்துகிறார் என்ற விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது பரவலாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு பேசும் பொருளாக மாறி இருப்பதோடு அசால்டாக குத்த கூடிய பச்சை விஷயத்தில் இவ்வளவு விவகாரம் உள்ளதா? என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது.


ஏதோ ஒன்றுக்காக பச்சை குத்த கூடியவர்களின் மத்தியில் தனது வாழ்நாள் முழுவதும் தன்னோடு இருக்கக்கூடிய பச்சையில் இவ்வளவு அர்த்தங்கள் இருந்தால் மட்டுமே அதை குத்துவேன் என்று கூறி இருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.