Posts

Showing posts with the label affidavit

தவறு மேல் தவறு! பெரும் சிக்கலில் விஜய்! இதை கூடவா சொல்லிக்கொடுக்க ஆள் இல்ல!

Image
சென்னை, ஏப்ரல் 5, 2026 : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவரும், நடிகருமான ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரு வேட்புமனுக்களிலும் வயது, குற்ற வழக்குகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் பெரம்பூர் தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருந்த நிலையில், விஜய் தரப்பு கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து சிக்கலைத் தீர்த்துள்ளது. எனினும், இந்தச் சம்பவம் அவரது அரசியல் அறிமுகத்தின் முதல் கட்டத்திலேயே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முரண்பாடுகளின் விவரம் மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது, விஜய் தனது வயதை 52 எனக் குறிப்பிட்டார். மேலும், தன்மீது எந்தக் குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தார். ஆனால், ஏப்ரல் 2-ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில் வயதை 51 எனக் குறிப்பிட்டார். அதேபோல், தன்மீது இர...

அனிதாவுக்காக அழுதது எல்லாம் பொய்யா? - காட்டு தீயாய் பரவும் TVK தலைவர் விஜய்யின் சீக்ரெட்”

Image
சென்னை: தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் தனது வேட்பாளர் பிரமாண பத்திரத்தில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் கோகிலாம்பாள் கல்வி டிரஸ்ட்டுக்கு (Gokilambal Education Trust) ரூ.20 கோடி கடன் கொடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விஜய், திமுக அரசை “நீட் ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” என்று குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த வெளிப்பாடு அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. விஜய் சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் (Nomination Affidavit) தனது சொத்து விவரங்கள், கடன்கள் உள்ளிட்டவற்றை விரிவாக தெரிவித்துள்ளார். அதில், மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.600 கோடிக்கு மேல் என்று குறிப்பிட்டுள்ள அவர், பல்வேறு தனிநபர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு கடன் வழங்கிய விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார். இதில் முக்கியமானது...

பொய்யா? திடீர் திருப்பம்! உடைந்தது மிகப்பெரிய ரகசியம்!

Image
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்புமணுவை தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்புமணுவில் தனது மனைவி சங்கீதா பெயரில் கணிசமான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவர் பட்டியலிட்டுள்ளார். இது, சமீபத்தில் சங்கீதா விஜய்க்கு எதிராக தொடுத்த விவாகரத்து வழக்கில் அவர் கூறியுள்ள “பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டிருக்கிறேன்” என்ற குற்றச்சாட்டுக்கு நேரடி முரணாகத் தெரிகிறது.விஜய் தாக்கல் செய்த வேட்புமணு விவரங்களின்படி: சங்கீதாவின் வங்கி சேமிப்புக் கணக்குகளில் சுமார் 11 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. எச்டிஎப்சி வங்கியில் 10 கோடி ரூபாய் நிலையான வைப்பு (FD) உள்ளது. சங்கீதா பெயரில் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தில் சங்கீதா பெயரில் ஒரு குடியிருப்பு உள்ளது. சங்கீதாவுக்கு மொத்தம் 15.51 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. மேலும், நகைகள் விவரத்தில்: 134 கேரட் வைரங்கள் – மதிப்பு 1 கோடி ரூபாய் 3 க...