சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்புமணுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த வேட்புமணுவில் தனது மனைவி சங்கீதா பெயரில் கணிசமான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.

இது, சமீபத்தில் சங்கீதா விஜய்க்கு எதிராக தொடுத்த விவாகரத்து வழக்கில் அவர் கூறியுள்ள “பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டிருக்கிறேன்” என்ற குற்றச்சாட்டுக்கு நேரடி முரணாகத் தெரிகிறது.விஜய் தாக்கல் செய்த வேட்புமணு விவரங்களின்படி:

  • சங்கீதாவின் வங்கி சேமிப்புக் கணக்குகளில் சுமார் 11 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.
  • எச்டிஎப்சி வங்கியில் 10 கோடி ரூபாய் நிலையான வைப்பு (FD) உள்ளது.
  • சங்கீதா பெயரில் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.
  • திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தில் சங்கீதா பெயரில் ஒரு குடியிருப்பு உள்ளது.
  • சங்கீதாவுக்கு மொத்தம் 15.51 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன.

மேலும், நகைகள் விவரத்தில்:

  • 134 கேரட் வைரங்கள் – மதிப்பு 1 கோடி ரூபாய்
  • 3 கிலோ தங்கம் – மதிப்பு 4 கோடி ரூபாய்
  • 2 கிலோ வெள்ளி உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சங்கீதா சமீபத்தில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்க்கு எதிராக விவாகரத்து வழக்குத் தொடுத்திருந்தார். அந்த மனுவில், “பொருளாதார ரீதியாக முழுமையாக முடக்கப்பட்டிருக்கிறேன்.

எனக்கு எந்த வருமானமும் இல்லை” என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும், லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து வசிக்க ஏதுவாக, நீலாங்கரையில் உள்ள வீட்டில் தன்னை வசிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், விஜயின் வேட்புமணு விவரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நேரெதிராக உள்ளன. சங்கீதா பெயரில் மட்டும் 25 கோடிக்கு மேல் சொத்துக்களும், வங்கிக் கணக்குகளில் பெரும் தொகையும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த முரண்பாடு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.விஜய் தரப்பிலிருந்து இது குறித்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

சங்கீதா தரப்பும் இந்த வேட்புமணு விவரங்கள் குறித்து இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தேர்தல் பிரசாரத்தின் போது மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : Actor Vijay filed his nomination for the Perambur constituency in the upcoming assembly election. In the affidavit, he listed assets belonging to his wife Shangeetha, including bank savings of about 11 crore rupees, 10 crore rupees in HDFC fixed deposit, movable assets worth 15.51 crore rupees, and immovable assets worth 25 lakh rupees. 

Jewellery details include 134 carat diamonds valued at 1 crore rupees and 3 kg gold valued at 4 crore rupees. This information contrasts with Shangeetha's recent court claims of financial constraints.