“இந்த படத்தில் நான் நடிக்க வேண்டி இருந்தது.. ஆனால்.. ஜோதிகா..” - வெளிப்படையாக கூறிய நடிகை சினேகா..!

“இந்த படத்தில் நான் நடிக்க வேண்டி இருந்தது.. ஆனால்.. ஜோதிகா..” – வெளிப்படையாக கூறிய நடிகை சினேகா..!

என்றுமே எவர்கிரீன் நடிகையாக இருக்கும் நடிகை சினேகா புன்னகை அரசி, பல் அழகி என்று பலராலும் அழைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் விரும்பக்கூடிய நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் இவர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவரது உண்மையான பெயர் சுகாசினி என்றாலும் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை சினேகா என்று மாற்றிக் கொண்டவர்.

நடிகர் மாதவனோடு நடித்த என்னவளே என்ற திரைப்படம் முதல் திரைப்படமாக அமைந்தது. மிகவும் ஹோமியான லுக்கில் அதிகளவு கவர்ச்சியை காட்டாமல் பக்குவமாக நடிக்கக்கூடிய நடிகை தான் சினேகா.

இவர் பம்பல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, உனை நினைத்து, ஜனா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் போன்ற பல படங்கள் முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

தமிழ் திரை உலகில் டாப் நடிகைகளின் வரிசையில் இருந்த இவர் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவரோடு இணைந்து நடித்த நடிகர் பிரசன்னா உடன் காதல் ஏற்பட்டு பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாக்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து வரக்கூடிய நடிகை சினேகா அண்மை பேட்டி ஒன்றில் தான் நடிக்க தவறவிட்ட படம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பட்டென்று சந்திரமுகி என்று கூறிவிட்டார்.

இந்த சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டரை இவர் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் அதை மிஸ் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். பொதுவாகவே நடிகைகள் தங்கள் தவற விட்ட படங்கள் பற்றி வாய் திறந்து எதுவும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் அதையும் தாண்டி நடிகை சினேகா சில தவிர்க்க முடியாத காரணங்களால் சந்திரமுகி படத்தில் தான் சந்திரமுகியாக நடிக்க முடியாமல் போன விஷயத்தை வெளிப்படையாக கூறி இருப்பதை அடுத்து ரசிகர்கள் இவர் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனினும் தன்னைவிட மிகச் சிறப்பாக ஜோதிகா அந்த கேரக்டரை பக்குவமாக செய்திருக்கிறார் என்ற விஷயத்தையும் பகிர்ந்து இருக்கக்கூடிய சினேகா தான் அந்த காட்சியில் நடிக்கவில்லையே என்ற கவலை தனக்கு ஏற்பட்டது இல்லை என்பதையும் கூறி இருக்கிறார்.