“கவர்ச்சி நடிகையாகும் முயற்சியில் இருக்கும் பெண்கள்.. இதை மறந்துடாதிங்க..” நடிகை சோனா பகீர்..!

“கவர்ச்சி நடிகையாகும் முயற்சியில் இருக்கும் பெண்கள்.. இதை மறந்துடாதிங்க..” நடிகை சோனா பகீர்..!

தமிழ் சினிமாவில் மிக அழகான கவர்ச்சி நடிகைகளில் ஒருவர்தான் சோனா. யாரும் கவர்ச்சி நடிகையாக மாற வேண்டும் என்று ஆசையில் சினிமாவுக்குள் வருவதில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நீ கவர்ச்சி காட்டதான் லாயக்கு என, சினிமாத் துறையினர் அவர்களுக்கு முத்திரை குத்தி விடுகின்றனர்.

சோனா ஹைடன்

பட வாய்ப்புகளை அடுத்தடுத்து பெறுவதற்காக கதாநாயகிகளே தாராள கவர்ச்சி காட்டும் இன்றைய தமிழ் சினிமாவில், கவர்ச்சி நடிகைகளாக முத்திரை குத்தப்படும் நடிகைகள், அவர்களது கவர்ச்சியை காட்டி தான் நிலைத்து நிற்க வேண்டியிருக்கிறது.

ஆனால் ஒரு நல்ல நடிகையாக இருந்தும் கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தப்பட்டு விட்டால், சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அதுபற்றி சொல்லி இருக்கிறார் சோனா என்கிற சோனா ஹைடன்

மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம்

சோனாவின் முழுப் பெயர் சோனா ஹைடன். கடந்த 2002ம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் வென்றவர். கடந்த 2008ம் ஆண்டில் குசேலன் என்ற படம் மூலம் அறிமுகமானார். சென்னையில் யூனிக் என்ற பெண்கள் ஆடையகத்தை நடத்தி வருகிறார்.

நடிகை சோனா, பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். மிருகம் என்ற படத்தில் விலை மாதுவாக நடித்திருப்பார். அடுத்து பூவெல்லாம் உன் வாசம், பத்து பத்து, சோக்காலி, அழகர் மலை, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல படங்களில் சோனா நடித்திருக்கிறார்.

சர்ச்சை நாயகி

சோனா ஒரு சர்ச்சை நாயகி என்றே சொல்லலாம். ஸ்மோக் என்ற வெப்சீரிஸ் ஒன்றில், தன்னை படுக்கைக்கு அழைத்து நபர்கள் குறித்து, அதில் பல பேரை குற்றம் சொல்லியிருந்தார்.

இதையும் படியுங்கள்: நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

குறிப்பாக இரவு நேர மதுபான பார்ட்டி ஒன்றில், பிரபல எஸ்பி பாலசுப்ரமணியம் மகன் எஸ்பிபி சரண், தன்னை அழைத்ததாக கூறி பலத்த பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் நடிகை சோனா.

கிளாமர் ரோல்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை சோனா, கிளாமர் ரோலில் நடித்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதில் நடிகை சோனா கூறியதாவது, கிளாமர் ரோலில் நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் செய்ய விரும்புவது ஒரே ஒரு அட்வைஸ்தான். நீங்கள் கிளாமர் ரோல் பண்றது தப்பில்லை. ஆனால், யோசனை பண்ணுங்க.

நான் பண்ணின ஒரே முட்டாள்தனம் இந்த இன்ஸ்டஸ்ட்ரி நம்மை கைவிட்டு விட்டால், அல்லது நான் வெளியேறி வந்துவிட்டால், கல்யாணம், குழந்தைகள், குடும்பம் என்ற திட்டங்கள் இருந்தால் இந்த கிளாமர் என்ற ரோல் பண்ண முடிவு பண்ணும்போது இந்த விஷயங்களை எல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள்.

யோசிக்காமல் விட்டு விட்டேன்

நான் அந்த நேரத்தில் யோசிக்காமல் விட்டு விட்டேன். எனக்கு அந்த நேரத்தில் என் குடும்பத்தை பார்த்தால் மட்டும் போதும் என்றுதான் தோன்றியது. ஆனால் அப்படி கிளாமர் ரோலில் நடித்ததால் ஏற்பட்ட பிரச்னைகள், பின்விளைவுகள் பின்னால்தான் எனக்கு தெரிய வந்தது.

இதையும் படியுங்கள்: என்னப்பா இது.. படு மோசமான படுக்கயறை காட்சியில் பூர்ணா.. வாயை பிளந்த ரசிகர்கள்..

உண்மையில் எந்த அளவுக்கு அது பிரச்னைகளை தரும் என்பதை நிஜ வாழ்க்கையில்தான் புரிந்துக்கொள்ள முடியும். இப்ப ஒவ்வொன்னாக அடி வாங்கிக்கொண்டு இருக்கிறேன், என்று அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை சோனா.

கவர்ச்சி நடிகையாகும் முயற்சியில் இருக்கும் பெண்கள், குடும்ப வாழ்க்கையை மறந்துடாதிங்க என்று நடிகை சோனா, தனது அனுபவம் சார்ந்த பகீர் உண்மைகளை இந்த நேர்காணலில் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.