உதயநிதிக்கு கைமாறும் முதல்வரின் துறை எது தெரியுமா!

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து அவரது தொகுதியில் பல முக்கியமான திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என அவரது கட்சித் தொண்டர்கள் பல்வேறு கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்தார் தந்தையும் தமிழ்நாட்டின் முதலமைச்சரான திரு மு க ஸ்டாலின் அவர்கள்.

ஒரே ஒரு செங்கலை கொண்டு தமிழ்நாடு முழுக்க மோடிக்கு எதிராக அதிமுக கூட்டணிக்கு எதிராக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என நூதனமான பிரச்சார யுத்தி மூலம் பிரபலம் அடைந்தார் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

‘உதயநிதி 14 ஆம் தேதி அமைச்சராகிறார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்படுகிறது’ என நக்கீரன் முதலில் செய்தி வெளியிட்டது. அது முக்கியத்துவம் இல்லாத துறை என  அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஒதுக்க திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. அதன்படி முதல்வரிடம் இருக்கும் ஒரு துறை உதயநிதிக்கு வழங்கப்படுகிறது. அந்தத் துறை சிறப்பு செயல்திட்ட அமலாக்கத்துறை. தமிழகத்தில் அமலாக்கப்படும் திட்டங்கள் பலவற்றை முதல்வர் சிறப்பு செயலாக்க திட்டத்துறை மூலமாகத்தான் நடைமுறைப் படுத்துகிறார்.

இந்தத்துறை, அனைத்து அமைச்சர்களும் சிறப்பு திட்டத்தை நடைமுறைபடுத்துவதை கண்காணிக்கும் துறை. முதல்வரிடம் இருக்கும் இந்தத் துறையின் செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் இருக்கிறார். உதயநிதியிடம் வரும் இந்தத் துறையின் செயலாளராக தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கக்கூடிய ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட இருக்கிறார். இவரை முதல்வரின் செயலாளர் உதயசந்திரன் பரிந்துரைத்திருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.

இதுபோல சுவாரஸ்யமான அரசியல் தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

   

--Advertisement--