மோடி கேட்ட கேள்வி ஆடிப்போன உதயநிதி!

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து அவரது தொகுதியில் பல முக்கியமான திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என அவரது கட்சித் தொண்டர்கள் பல்வேறு கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்தார் தந்தையும் தமிழ்நாட்டின் முதலமைச்சரான திரு மு க ஸ்டாலின் அவர்கள்.

ஒரே ஒரு செங்கலை கொண்டு தமிழ்நாடு முழுக்க மோடிக்கு எதிராக அதிமுக கூட்டணிக்கு எதிராக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என நூதனமான பிரச்சார யுத்தி மூலம் பிரபலம் அடைந்தார் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

--Advertisement--

இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த உதயநிதி அவர்கள் தன் துறை சார்ந்த பல முன்னெடுப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார் என திமுக செய்தி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டது.

 ஆனால் பிரதமர் என்ன பேசினார் என சொல்லவில்லை. இதுகுறித்து பிரதமர் அலுவலக சோர்ஸ் மூலம் வெளிவந்த தகவல் என்ன எனில்,

 மோடி அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் உங்களுடைய எல்லா திரைப்பட பணிகளை முடித்துவிட்டு முழு நேர அமைச்சர் பணியில் இறங்கி விட்டீர்கள் போல தெரிகிறது என  கேட்டாராம்.

  பிரதமர் மோடி அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்தே வருகிறார் என இதன் மூலம் தெரிகிறது. இது உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

இது மோடி அவர்கள் பாஜக ஆட்சி இல்லாத அனைத்து மாநிலத்திலும் என்ன நடக்கிறது என விரல் நுனியில் வைத்திருப்பதற்கான சான்று என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

 இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்