விஜய் நடிக்க மறுத்து.. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள்.. லிஸ்ட் போயிகிட்டே இருக்கே.

விஜய் நடிக்க மறுத்து.. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள்.. லிஸ்ட் போயிகிட்டே இருக்கே..

நடிகர் விஜய் தான் இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

அதே போல் அவரது படங்கள்தான் மற்ற நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார் ஆகியோரது படங்களை காட்டிலும் அதிக வசூல் கிடைத்து வருகிறது.

விஜய்

அதனால் விஜய் படங்களை இயக்க இயக்குநர்கள் தரப்பிலும், தயாரிப்பாளர்களும் நான், நீ என்ற கடும் போட்டி, கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஆனால் இப்படி ஒரு பீக் லெவலில் இருக்கும் நடிகர் விஜய், இந்த மாதம் 2ம் தேதி ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

--Advertisement--

தமிழக வெற்றிக்கழகம்

அதில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்குவதாகவும், இப்போது நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு பிறகு ஒரே ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதன்பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்தார்.

இந்த திடீர் அறிவிப்பு, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் தமிழ் சினிமா துறையினருக்கு ஒரு வித அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: கோடியில் புரளும் நடிகை தேவயானி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

ஏனெனில், ஆண்டு பல நூறு கோடி பிஸினஸ் செய்யும் தயாரிப்பாளர்களுக்கு விஜய் நடிக்கும் படங்கள் முக்கிய இலக்காக இருந்தன. இவரது படங்களால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

எங்கள் இலக்கு

பெரும்பாலான நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகுதான் சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைவார்கள். ஆனால் இவர் திடீரென நெம்பர் 1 பொசிஷனில் இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்தது பலருக்கும் திகைப்பை ஏற்படுத்தியது.

அதுவும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருடனும் கூட்டணியோ, யாருக்கும் ஆதரவோ இல்லை என அறிவித்த விஜய், 2026ம் ஆண்டில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என்றும் கூறியிருக்கிறார்.

வில்லனாக வந்துவிட்டாரே…

இது தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கும், எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கும் பயங்கர அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் கதாநாயகன் விஜய், தமிழக அரசியலில் நமக்கு வில்லனாக வந்து விட்டாரே என்று அந்த கட்சியில் பயங்கர அப்செட்டில் இருக்கின்றனர்.

இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு அடுத்து ஏப்ரலில் கட்சி மாநாட்டை மதுரையில் நடத்துகிறார்.

பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடித்துவிட்டு, 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

நடிக்க மறுத்த படங்கள்

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்க மறுத்த படங்கள் குறித்த ஒரு லிஸ்ட் வெளியாகி உள்ளது. இந்த படங்களில் முதலில் நடிக்க இயக்குநர்கள் அணுகியது விஜயை தான். அவர் நடிக்க மாட்டேன், கதை பிடிக்கவில்லை என்று மறுத்ததால் மற்ற ஹீரோக்கள் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: அருண் விஜய் அம்மாவால் தான் நான் இதை கத்துகிட்டேன்.. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சமில்ல.. வனிதா ஓப்பன் டாக்..

அந்த படங்களை பார்க்கும்போது விஜய், இப்படி மறுத்திருக்கிறாரே என்ற ஒருவிதமான அங்கலாய்ப்புதான் விஜய் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.

முதல்வன்

இயக்குநர் தரணி இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தூள், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி, ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த தீனா, ஆகிய படங்களை தான் விஜய் புறக்கணித்து இருக்கிறார்.