தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மற்ற சீசனை காட்டிலும் சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது. மேலும் மற்ற சீசன்களில், சீசன் முடிவதற்கு முன்பே இவர் தான் டைட்டில் வின்னர் என்பதை மக்கள் எளிதில் கணித்து விட்டார்கள்.
ஆனால் இந்த சீசனைப் பொருத்தவரை 80 நாட்கள் கடந்த நிலையிலும் யார் டைட்டில் வின்னர்? என்பதை எவராலும் கணிக்க முடியாத அளவு திணறி வருகிறார்கள். இதற்குக் காரணம் பிக் பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி மக்கள் மத்தியில் ஆதரவை பெறுபவர்கள், அடுத்த வாரம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு அவர்களது பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதரவை பார்க்கையில் விசித்ரா அல்லது அர்ச்சனா தான் வெற்றி பெறுவார் என்று ஓரளவிற்கு நிர்ணயம் செய்து விட்டார்கள்.
இருந்தாலும் துல்லியமாக யார் அந்த டைட்டில் வின்னர்? என்பது குறித்த கணிப்பு முன்பு நடந்த பிக் பாஸ் வெற்றியாளர்களின் பெயரை வைத்து இந்த சீசனில் யார் வெற்றி அடைவார்கள் என்ற கணிப்பு கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் வெற்றியாளராக ஆரவ் இருந்தார். இவருடைய பெயரின் முதல் எழுத்து ஆங்கிலத்தில் A வில் ஆரம்பிக்கிறது. அதுபோல சீசன் இரண்டில் வெற்றி பெற்றது ரித்விகா இவருடைய பெயரின் ஆரம்ப ஆங்கில எழுத்து R.
மேலும் மூன்றாவது பிக் பாஸ் சீசனில் டைட்டில் வின்னராக விளங்கியவர் முகேன் இவருடைய பெயரின் முதல் எழுத்து M ஆகும். நான்காவது சீசனில் வெற்றி பெற்றவர் ஆரி அர்ஜுன் இவரது பெயரில் முதலாவது எழுத்து ஆங்கிலத்தில் A ஆகும்அடுத்ததாக சீசன் ஐந்தில் மக்கள் நாயகன் ராஜ் டைட்டிலை வென்றெடுத்தார். இவரின் பெயரில் முதல் எழுத்தாக அமைவது R. இதனை அடுத்து ஆறாவது போட்டியில் வெற்றி பெற்றவர் அசிம் இவர் பெயரின் முதல் எழுத்தை பார்த்தால் A வில் தொடங்குகிறது.
இதையெல்லாம் சேர்த்து பார்க்கையில் பிக் பாஸ் சீசனில் A R M A R M எனும் எழுத்துக்களின் வரிசையில் தான் போட்டியாளர்கள் வெற்றி அடைந்து இருக்கிறார்கள்.
எனவே இந்த சீசனிலும் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயருடைய நபர் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று டைட்டில் வின்னர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளது.
எனவே அப்படி A என்ற பெயரில் ஆரம்பிக்கும் நபர் யார் என்றால் அர்ச்சனா தான். எனவே அர்ச்சனா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னராக இருப்பார் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த கணிப்பு எந்த அளவு உண்மை என்பது போட்டி முடிவில் கட்டாயம் தெரிந்து விடும். அதுவரை நாம் காத்திருப்போம்.இதன் மூலம் வெற்றியாளர் யார்? என்பதை விரைவில் தெரிந்து கொள்வோம்.