கோவை சரளா ஏன் கல்யாணம் பண்ணல.. யாரு காரணம்.? ரகசியம் உடைத்த நடிகர்..!

தமிழ் திரை உலகில் சில முக்கிய துணை வேடங்களில் நடிக்கக்கூடிய மிகச்சிறப்பான நடிகையாகவும், நகைச்சுவையில் கலக்கும் நடிகையாகவும் திகழ்ந்தவர் தான் கோவை சரளா. இவர் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி பிறந்தவர்.


ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இது வரை சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். கோவை தமிழில் பேசிக் கலக்கும் இவரது நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

நடிகை கோவை சரளா..

அந்த வகையில் நடிகை கோவை சரளா சிறந்த நகைச்சுவை நடிகைக்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் நந்தி விருதை பெற்றவர். இவர் 1983-இல் முந்தானை முடிச்சு படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து வைதேகி காத்திருந்தால், தம்பிக்கு எந்த ஊரு, மண்ணுக்கேத்த பொண்ணு, உயர்ந்த உள்ளம், சின்ன வீடு, லட்சுமி வந்தாச்சு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இதுக்கு தான் அவசர விவாகரத்தாம்..

மேலும் இவர் 2015-ல் காசி 2014-இல் அரண்மனை 2013-ல் ரெட்டை வாலு அதே ஆண்டில் முனி 3, கங்கா போன்ற படங்களில் கலந்து கொண்டு தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

--Advertisement--


இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளும் நடித்து இருக்கக்கூடிய இவர் சுந்தரி சௌந்தரி தொடரில் சன் தொலைக்காட்சிகள் நடித்திருக்கிறார். மேலும் வந்தன தந்தனா என்ற தொடரில் கலைஞர் தொலைக்காட்சியில் பங்கேற்று இருக்கிறார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சகலகலா சரளா காமெடியில் கலக்குவது எப்படி போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மிகச் சிறப்பான முறையில் இருந்தது.

இவர் பேசிய வசனங்களில் கரகாட்டக்காரன் படத்தில் இடம் பிடித்திருக்கும் என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம் என்ற வசனம் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்படக்கூடிய வசனங்களில் ஒன்றாக உள்ளது.


அதே படத்தில் என்ன காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாங்கோ.. தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாங்கோ.. அங்க எல்லாம் போகாம என் கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன் என்று பேசிய பேச்சு என்றும் இளைஞர்களால் ரசிக்கப்படுகிறது.

அதுபோலவே ஷாஜகான் படத்தில் தொறை இங்கிலீஷ் எல்லாம் பேசுது என்ற வசனமும் சினேகிதனய்ய் சினேகிதனய்ய் ர்ர்ரகசிய சினேகிதனய்ய் என்ற வசனமும் பிரபலமான வசனம் ஆகும்.

ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல..

இவ்வளவு பெருமைகளுக்கும் பணத்திற்கும் குறைவில்லாத கோவை சரளா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தனது உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்கள். இவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது கோவை சரளா 58 வயதை கடந்து விட்ட நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் என்று என்ன என்று சொன்னால் அசந்து போவீர்கள். கோவை சரளா அவரது குடும்பத்தின் மூத்த மகள் அவர்களுக்கு நான்கு சகோதரிகள் இருக்கிறார்கள்.

காரணத்தை உடைத்த நடிகர்..

இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரிகளின் திருமணத்திற்கு உதவினார். மேலும் அவர்களது குழந்தைகளின் கல்வி உட்பட்ட அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: 2 திருமணம்.. 2 விவாகரத்து.. ஆனால், பல தொடர்புகள்.. அம்பிகா குறித்து பிரபல நடிகர்.!


அவள் தேவைப்படுபவர்களுக்கு உதவுவாள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தனது வாழ்க்கையை தியாகம் செய்து இன்று வரை தனிமையில் இருந்து மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் தனது வாழ்நாள் முழுவதும் செலவிடுகின்ற நடிகையாக மாறுவதை விரும்பியதாக கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோவை சரளாவின் ரசிகர்கள் அவர்கள் செயலுக்காக பாராட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த விஷயத்தை இணையங்களில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.