விஜய், அஜித் பற்றி பிக்பாஸ் அபிராமி கூறியதை கேட்டீங்களா..?


நடிகர் அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" படத்தில் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் கதையின் கருவாக இருக்கும் மூன்று பேரில் ஒருவராக நடித்துள்ளார். அந்த படம் ஆகஸ்ட் மாதம் தான் வெளிவருகிறது. 

ஆனால் அவர் அதற்கு முன்பே தற்போது துவங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாகிவிட்டார். இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது நாள் காலை விஜய் பட பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அதற்கு அனைவரும் நடனம் ஆடி உற்சாகம் அடைந்தனர். பாடலின் இறுதியில் நடிகை அபிராமி மட்டும் பாத்ரூம் ஏரியாவில் நின்று கொண்டு 'ஐ லவ் யூ விஜய்' என கத்தினார். 

அதனை தொடர்ந்து, நாளின் இறுதியில் நடந்த ஒரு டாஸ்க்கில் 'உங்களில் வாழ்வில் மறக்கமுடியாத நாள் எது?' என கேள்வி கேட்கப்பட்டது.