எல்லை மீறி போறீங்க..! கமல் பட நடிகையை விளாசும் ரசிகர்கள் - என்ன காரணம்.?


நடன இயக்குனரும், நடிகையுமான ஆஷா சரத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாபநாசம் மற்றும் தூங்காவனம் என இரண்டு கமல் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.

ஆனால், இவர் முகம் தெரியும் அளவுக்கு கதாபாத்திரம் இந்த இரண்டு தமிழ் படங்களிலும் அமையவில்லை. இது ஒரு புறம் இருக்க, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. 

இவருக்கு இப்போது 43 வயது ஆகின்றது . இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள கைப்பிடியில் இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார், தனது கணவர் நீண்ட நாட்களாக காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்தால் இந்த காவல் நிலையத்தில் அறிவிக்க வேண்டும் என அ முதல் ஃ வரை அனைத்து விபரத்தையும் கூறியிருந்தார். 

இதனால் இந்த வீடியோ வைரலாகி , பல லட்சம் பார்வையாளர்களை பெற்றது. எல்லாம் முடிந்த கடைசியில் அவர் அந்த வீடியோ வெளியிட்டதற்கு அருடைய புதிய படத்தின் புரொமோஷனுக்கு என்று கூறியுள்ளார். 

இதனை அறிந்த ரசிகர்கள். உங்களுடைய கணவர் நிஜமாகவே ஒருநாள் மாயமாகிவிடுவார். அப்போது, இப்படி வீடியோ போடுங்க ஒருத்தரும் உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டாங்க. படத்தின் ப்ரோமோஷன் என்ற பெயரில் எல்லை மீறி போறீங்க என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
Share it with your Friends