அனைத்து வாக்குகளையும் ஒருவருக்கே போட்ட ரியோ ராஜ் - யாருக்கு போட்டிருக்கிறார் பாருங்க..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் 16 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 23ஆம் தேதி துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில் நாளை மறுதினம் மற்றொரு போட்டியாளர் வெளியே அனுப்பப்படுவார்.

வீட்டில், காதல், சோகம், சண்டை, அழுகை என அனைத்தும் நிரம்பி வழியும் நேரத்தில் நடிகையும், செய்தி வாசிப்பாளருமான ஃபாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேறினார்.

மேலும் இந்த வாரம் நாமினேசன் லிஸ்ட்டில் வனிதா, மதுமிதா, மீரா, மோகன் வைத்யா, சரவணன் ஆகியோ உள்ளன. இந்நிலையில், தனது விருப்ப போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் கவனமாக ஓட்டு அளித்து வருகின்றனர். இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நடிகரும் தொலைகாட்சி தொகுப்பாளருமானவுமான ரியோ ராஜ் தான் யாருக்கு ஓட்டு அளித்துள்ளேன் என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளார். அதில், சித்தப்பு சரவணனுக்கே தன்னுடைய 50 ஓட்டுகளையும் போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய எபிசோடில் தான் டாஸ்கில் பங்கேற்கவில்லை என கேப்டன் அபிராமி சொல்லும் போது வாயை மூடிக்கொண்டு இருந்த அனைத்து போட்டியாளர்களையும் பொழந்து கட்டினார் சரவணன். இதனால், இவருக்கு ஓவர் நைட்டில் ரசிகர்கள் பலர் உருவாகியுள்ளனர். அந்த லிஸ்டில் ரியோவும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.
Share it with your Friends