காதல் தோல்வி - படங்கள் தோல்வி - நிஜ நீலாப்பரியாக மாறிய வாரிசு நடிகை..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


உலக ஹீரோவின் வாரிசு நடிகை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தாராம். காதலில் இருக்கும் போதே இன்பசுற்றுலா, பார்ட்டி, குடும்ப நிகழ்சிகள் என சென்ற இடமெல்லாம் ஜோடி போட்டு சென்று வந்தாராம். 

ஆனால், இப்போது அவருடைய காதல் தோல்வியடைந்து விட்டதாம். இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெற்றதில்லை. தல நடிகரின் முருங்கை மரம் ஏறும் ஆவியின் படம் மற்றும் லக்ஷ்மிகரமான நடிகை நடித்ததால் தப்பி பிழைத்தது. 

படங்கள் தான் இப்படி என்றால் தன்னுடைய காதலும் தோல்வியடைந்து விட்டதே என விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். சரி, படங்களில் நடிக்கலாம் என்றால் போதும்மா சாமி ஆளை விடு கணக்கான தெறித்து ஓடுகிறார்களாம் இயக்குனர்கள். 

Advertisement
Share it with your Friends