என் கணவன் என்னை அடித்து அதனை நிருபிக்க முயற்சிக்கவில்லை - பாடகி சின்மயி பதிலடி


இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி படத்தினை பாலிவுட்டில் கபீர் சிங் என்ற தலைப்பில் ரீமேக் செய்து அங்கேயும் தற்போது பெரிய ஹிட் ஆகியுள்ளது.

இந்த படத்தினை தெலுங்கில் இயக்கிய சந்தீப் ரெட்டியே தான் ஹிந்தியிலும் இயக்கியுள்ளார். அவர் அளித்துள்ள புதிய பேட்டி ஒன்றில் இந்த படம் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

ஒரு பெண்ணை ஹீரோ அடிக்கும்போது தியேட்டர் கைதட்டுகிறது, அது சரியா என பெண்ணியவாதிகள் கேள்வி எழுப்புவது பற்றி பதில் அளித்த அவர், அப்படி கூறுபவர்கள் இதுவரை காதலித்தே இருக்க மாட்டார்கள். 

உண்மையான காதலில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறையும் அளவுக்கு நெருக்கமாகத்தான் இருப்பார்கள். அது அவர்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியாது. என அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாடகி சின்மயி, "நான் காதலில் இருக்கிறேன். என் கணவர் என்னை மிகவும் காதலிக்கிறார். ஆனால் அவர் என்னை அடித்து அதை நிரூபிக்க முயன்றதில்லை" என  பதிலடி கொடுத்துள்ளார்.