எழும்பும் தோலுமாக மாறிய நடிகர் சந்தானம்..! - என்ன இப்படி ஆகிட்டாரு..?


நடிகர் சந்தானந்தின் படங்களான அக்யூஸ்ட் நம்பர் 1, சர்வர் சுந்தரம், டகால்டி என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இந்த படங்களில் அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்படம் முதலில் வெளியாகவுள்ளது. 

இதனை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக சிக்கலில் இருக்கும் சர்வர் சுந்தரம் திரைப்படத்தை திரைக்குகொண்டுவருவதில் முனைப்புடன் இருக்கிறார் சந்தானம். 


அதற்க்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், தனது ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் நடத்தும் கால்டாக்சி சேவை அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்தார். 

அவரை பார்த்த பலரும் ஷாக் ஆகித்தான் போனார்கள். காரணம், எழும்பும் தோலுமாக ஆளே மாறியுள்ளார் சந்தானம். என்ன இப்படி ஒல்லியாகிடீங்க என்று கேட்டால், மூணு வேலையும் பிரியாணி சாப்டா மூனே மாசத்துல மறுபடியும் வெயிட் போட்டுட போறேன் என்று தன்னுடைய ஸ்டைலில் பதிலளித்து விட்டு சென்றார்.