அம்மாடியோவ்..! அல்லு அர்ஜுனின் கேரவேனை பார்த்தீங்களா..? விலை இத்தனை கோடியா..?


பொதுவாக பிரபல நடிகர்கள் என்றாலே படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் வசதியாக இருக்க கேரவேன்கள் வைத்திருப்பார்கள்.

இரண்டாம் கட்ட நடிகர்கள் கேரவேனை வாடைகைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால், முன்னணி நடிகர் நடிகைகள் தங்களுக்கென சொந்தமாக கேரவேன் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.


இந்தியாவில் எங்கு படப்பிடிப்பு என்றாலும் அவர்களுக்கு முன் அவர்களுடைய கேரவேன் அங்கு போய் நிற்கும். நயன்தாரா, திரிஷா ஆகியோரும் நடிகர்களின் நடிகர் விஜய், சூர்யா ஆகியோரும் சொந்தமாக கேரவேன் வைத்துள்ளர்கள். 

தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் பலர் தங்களுகென சொந்தமாக கேரவேன் வைத்துள்ளார்கள். அந்த வகையில், நடிகர் அல்லு அர்ஜுன் புதிய கேரவேன் ஒன்றை வாங்கியுள்ளார். 


அதனுடைய விலை மட்டும் 5 கோடியாம். மேலும், அதனை மெருகேற்ற 2 கோடி வரை செலவு செய்துள்ளாராம். இந்த பணம் இருந்தால் ஒரு மினி பட்ஜெட் படமே எடுத்துவிடலாமே என வியக்கிரார்கள் பொதுவான ரசிகர்கள். 

இதோ அந்த கேரவேனின் புகைப்படங்கள், 

Share it with your Friends