கஷ்டப்பாட்டாலும் சரி- இனி திருமணமே செய்துகொள்ளமாட்டேன் - அடம் பிடிக்கும் நடிகை


தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்துவரும் அந்த நடிகை. தெலுங்கு படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானார். இதனால், தமிழ் சினிமாவும் அவரை வரவேற்றது. 

தமிழுக்கு வந்து நடித்த சில படங்களிலேயே ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டார். உடனே, சினிமா துறையில் உள்ள ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

ஆனால், சில வருங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நடிகை தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், திருமணம் ஆனவர் என்பதால் அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது. தயங்காமல் நடித்து வந்த அவருக்கு இப்போது பெரிய ஷாக். 

கடந்த ஒரு வருடமாக அந்த அக்கா, அண்ணி வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இதனால், தீவிரமான பணக்கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளார். நிலைமை அறிந்த நண்பர்கள் பண உதவி செய்தது மட்டுமில்லாமல், இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ நாங்க வேணா நல்ல வரன் பாக்குறோம் என்று கேட்டுள்ளனர். 

வேண்டவே வேண்டாம். முதல் திருமணம் பிரிவின் துயரத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை. நான் பணமே இல்லாமல் கஷ்டப்பாட்டாலும் சரி, இரண்டாவது திருமணம் வேண்டாவே வேண்டாம் என்று அடம் பிடிக்கிராராம்.