இதில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகை ராதிகா அப்தே கன்றாவி பேச்சு..!


ஆள் இன் ஆள் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, தற்போது பாலிவுட் படங்களில், கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது, தன் கவர்ச்சி புகைப்படங்களை, இணையதளத்தில் பதிவேற்றும் அவர், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் குறிப்பிடுகிறார்.


அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் எதையாவது செய்துகொண்டே இருக்கிறார் அம்மணி. அப்போது தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்ற ரகசியத்தை புரிந்து வைத்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''நடிப்பு, நடனம் போன்றவற்றை எப்படி காதலிக்கிறேனோ, அதுபோலவே, எனக்கு பிடித்த அனைவரையும் காதலிக்கிறேன்.

ஒருவனுக்கு, ஒருத்தி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரே நேரத்தில், பல சூழலில், பலரை நான் காதலிக்கிறேன்,'' என, கூறியுள்ளார்.