என்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.இந்தப் படத்தை அடுத்து அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்தி உருவான விஸ்வாசம் படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60-வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடிக்கவுள்ளதக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் 60 படத்தில் அனிகா இணைந்திருப்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. விரைவில் ‘தல 60’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீப காலமாக தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா தற்போது "Ippa Sheriyakki Tharam" என்ற வசனம் தாங்கிய டீசர்ட்டை அணிந்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  


மேலும், உங்கள் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்தையும் குழப்பி விடும் முன்பு எப்போதும் சொல்லுவது "இப்போ எல்லாம் சரி ஆகிடும்" என்பது தான் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் குமுறி குமுறி சிரித்து வருகிறார்கள். அது ஏன் என்று உங்களுக்கு புரியவில்லை என்றால் கீழே உள்ள நகைச்சுவை காட்சியை பார்த்தால் புரியும்.
Share it with your Friends