பட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா..!


தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து 17 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. ரசிகர்களால் "தொப்புள் ராணி" என்று அழைக்கப்படும் திரிஷாவுக்கு 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன. 

இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் திரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துள்ள திரிஷா 60 வயதான பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே, பாலகிருஷ்ணாவுடன் லயன் என்ற படத்தில் ரொமான்ஸ் செய்தார் திரிஷா. 

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் நடிக்கவுள்ள இந்த படத்திலும் இதுவரை இல்லாத படு கிளமாராக நடிக்கவுள்ளாராம்.

பட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா..! பட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா..! Reviewed by Tamizhakam on November 09, 2019 Rating: 5
Powered by Blogger.