எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை - கேவலமான ட்ரென்ட் - இந்த காட்சி நினைவிருக்கிறதா..?


சமூக வலைதளங்களில் விஜய்,அஜித் ரசிகர்கள் சண்டை இன்று நேற்று நடப்பது அல்ல. அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும். 

இந்த பிரச்சனை இந்தியா முழுதும் உள்ள நடிகர்களுக்கும் இருக்கிறது என்றாலும் தமிழ் நடிகர்களான விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை இந்திய அளவில் ட்ரென்ட் ஆகின்றது என்பது தான் வேதனையான உண்மை.

அந்த வகையில், நேற்று இரு தரப்பு ரசிகர்களும் மிக மோசமான ட்ரெண்ட் செய்து ஒருவரை ஒருவர் டேமேஜ் செய்து கொண்டனர். இதனை பார்த்த முன்னணி நடிகையான டாப்ஸி மற்றும் சில நடிகைகள் கூட தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 


இப்படியான ஹேஸ்டேக்குகளை ட்ரென்ட் செய்த மற்றும் அதில் பங்கு பெற்ற ரசிகர்கள், நெட்டிசன்கள் அனைவருமே சமீபத்தில் திரைக்கு வந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை பார்த்தார்களா..? என்று தெரியவில்லை. 

அந்த படத்தில், ஒரு காட்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு நடிகர் சித்தார்த் நைட்டியை அணிந்து கூட்டி வருவார். 

ஒரு கட்டத்தில் சித்தார்த் அம்மாவே ‘ஏண்டா நாங்களும் தான் ஆண்கள் உடையை அணிகிறோம், அதில் எந்த உறுத்தலும் இல்லை, ஆனால், பெண்கள் உடை என்றால் உங்களுக்கு அவமானப்படுத்துவதாக உள்ளதா, முதலில் நீ திருந்து’ என்பார், அது தான் நேற்று ட்ரெண்ட் செய்தவர்களுக்கான சிறந்த பதிலாக இருக்க முடியும் என்று நினைக்கிறோம்.

எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை - கேவலமான ட்ரென்ட் - இந்த காட்சி நினைவிருக்கிறதா..? எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை - கேவலமான ட்ரென்ட் - இந்த காட்சி நினைவிருக்கிறதா..? Reviewed by Tamizhakam on November 23, 2019 Rating: 5
Powered by Blogger.