"பொன்னியின் செல்வன்" - 800கோடி பட்ஜெட் - யார் யார் நடிக்கிறார்கள்..? வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்..!


ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வரலாற்று நாவலான "பொன்னியின் செல்வன்" ஒரு பாகம் மட்டும் இப்போது படமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கவுள்ள இந்த படம் பிரமாண்ட பொருட்செலவில் தயரிக்கபடுகின்றது. 

இந்த படத்தில் நடிகர்கள், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், கிஷோர், அஸ்வின் காக்கமனு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். 

அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சில முன்னணி நடிகர்கள் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் மணிரத்னத்துடன் சேர்ந்து குமரவேல் திரைக்கதை அமைத்திருக்கிறார். 

ஜெயமோகன் தான் படத்திற்கு வசனகர்த்தா. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக தோட்டா தரணி பணியாற்றுகிறார். 

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங், ஷாம் கவுசல் மற்றும் வாசிம் கான் சண்டை பயிற்சி, ஏகா லஹானி ஆடை வடிவமைப்பு, பிருந்தா நடனம், மக்கள் தெடார்பு ஜான்சன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை இணைந்து தயாரிக்கும் இந்த படம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

"பொன்னியின் செல்வன்" - 800கோடி பட்ஜெட் - யார் யார் நடிக்கிறார்கள்..? வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்..! "பொன்னியின் செல்வன்" - 800கோடி பட்ஜெட் - யார் யார் நடிக்கிறார்கள்..? வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்..! Reviewed by Tamizhakam on December 13, 2019 Rating: 5
Powered by Blogger.