75 வயது தயாரிப்பாளரை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்ட 52 வயது பிக்பாஸ் நடிகை..!


சினிமா பிரபலங்களின் விவாகரத்துகள் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டன. தடல் புடலாக திருமணம் செய்கிறார்கள் இரண்டு மாதம் முதல் இரண்டு வருடங்கள் வரை சேர்ந்து வாழ்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. 

திடீரெனே விவாகரத்து செய்தியை அறிவிக்கிறார்கள். இது ஒரு பிரபலம் என்பதை தாண்டி தனிநபர்விவகாரம் என்பதால் அதற்குள்மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை.

அதிலும், நடிகைகள் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்வது ஒன்றும் புதிய செய்தியல்ல. ஆனால், ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றுள்ள நடிகை பமீலா அன்டர்சன் என்பவர் ஐந்தாவது முறையாக ஒருவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். தற்போது, இவருக்கு 52 வயது ஆகின்றது. 


இந்நிலையில், ஐந்தாவது திருமணம் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஒளிபரப்பான ஹிந்தி பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் ஜான் பீட்டர்ஸ் என்ற தயாரிப்பாளரை தான் ஐந்தாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். 75 வயதாகும் ஜானும் ஏற்கனவே நான்கு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவருக்கும், இது ஐந்தாவது திருமணம் தான். 

இவர்கள் திருமணம் கடந்த திங்கட்கிழமை கலிஃபோர்னியாவில்நடைபெற்றது.

75 வயது தயாரிப்பாளரை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்ட 52 வயது பிக்பாஸ் நடிகை..! 75 வயது தயாரிப்பாளரை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்ட 52 வயது பிக்பாஸ் நடிகை..! Reviewed by Tamizhakam on January 22, 2020 Rating: 5
Powered by Blogger.