பிரபல வாரிசு நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற நபர் - உடையை குறை சொல்லும் ரசிகர்கள் - வைரல் வீடியோ.!


பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானிற்கும் அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்த மகள் தான் சாரா அலி கான். 1991-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை திருமணம் செய்துகொண்ட சைஃப் அலிகான் 24 ஆண்டுகள் திருமண வாழ்கைக்கு பிறகு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். 

இவரது முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கு பிறந்தவர் நடிகை சாரா அலிகான். தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தினம்தோறும் ஜிம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சாரா உடற்பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு வெளியில் வந்தபோது அவரை காண ரசிகர்கள் பலர் காத்திருந்தனர். அவர் வெளியே வந்ததும் சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். 

அப்போது, திடீரென ரசிகர் ஒருவர் சாராவின் கையில் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். நடிகை சுதாரித்துக்கொண்டு கையை எடுத்துக்கொண்டார், அருகில் இருந்த பாதுகாவலர் அந்த நபரை துரத்தியுள்ளார். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள், உடற்பயிற்சி செய்யும் போது என்னஉடை வேண்டுமானலும் அணிந்து கொள்ளுங்கள். ஆனால், அதே உடையுடன் ஏன் பொதுவெளிக்கு வருகிறீர்கள் என்று அவரது உடையை குறை சொல்லி வருகிறார்கள்.

பிரபல வாரிசு நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற நபர் - உடையை குறை சொல்லும் ரசிகர்கள் - வைரல் வீடியோ.! பிரபல வாரிசு நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற நபர் - உடையை குறை சொல்லும் ரசிகர்கள் - வைரல் வீடியோ.! Reviewed by Tamizhakam on January 09, 2020 Rating: 5
Powered by Blogger.