"அவர் பயன்படுத்திய ஆணுறைகளை என்னை சுத்தம் செய்ய சொன்னார்" - தயாரிப்பாளர் மீது பெண் உதவியாளர் புகார்.!


ஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன். 68 வயதாகும் இவர் தனது சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து ‘தி வெய்ன்ஸ்டீன் கம்பெனி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இந்த நிறுவனம் மூலம் பல முக்கியமான ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்களை பல ஆண்டுகளாக ஹார்வி வெய்ன்ஸ்டீன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக அவ்வபோது புகார்கள் எழுந்து வந்தன. 

இது தொடர்பாக, கடந்த வருடம் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது ஒரே நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் #MeToo இயக்கம் மூலம் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரம் உலக அரங்கில் கவனிக்கப்படும் விஷயமாக மாறியது.

ஒரே நபர் எப்படி 70-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியிலான அத்துமீறல்களை செய்தார் என பெரும் சர்ச்சை வெடித்தது. 

இது, தொடர்பாக ஹார்வி வெய்ன்ஸ்டீன், அவரது நிறுவனம் மற்றும் ஹார்வியின் சகோதரரும், நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரியுமான பாப் வெய்ன்ஸ்டீன் ஆகியோர் மீது நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் சினீடர்மென் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை காக்க தவறிவிட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் மீதும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இந்த வேளையில், வெயின்ஸ்டீன் அலுவலகத்தில் சில வருடங்களுக்கு முன் பர்சனல் அசிஸ்டன்ட்டாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் புது புகார் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, " அவர் பயன்படுத்திய ஆணுறைகளை அப்புறபடுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்யுமாறு வெயின்ஸ்டீன் என்னிடம்  பலமுறை கூறினார். அதனால், ஒரு கட்டத்தில் நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன். இதனால் நான் மிகுந்த மனஅழுதத்திற்கு ஆளானேன்" என்று கூறியுள்ளார்.

"அவர் பயன்படுத்திய ஆணுறைகளை என்னை சுத்தம் செய்ய சொன்னார்" - தயாரிப்பாளர் மீது பெண் உதவியாளர் புகார்.! "அவர் பயன்படுத்திய ஆணுறைகளை என்னை சுத்தம் செய்ய சொன்னார்" - தயாரிப்பாளர் மீது பெண் உதவியாளர் புகார்.! Reviewed by Tamizhakam on January 20, 2020 Rating: 5
Powered by Blogger.